அதிகரிக்கும் இந்தியாவின் கடன், வட்டி சுமை: சிஏஜி கவலை

Updated : ஆக 12, 2022 | Added : ஆக 12, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
புதுடில்லி: மத்திய அரசின் கடன் சுமை மற்றும் வட்டி சுமை தொடர்ந்து அதிகரித்து வருவது தொடர்பாக சிஏஜி எனப்படும் மத்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை கவலை தெரிவித்துள்ளது. பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அதன் அறிக்கையில், கடந்த 2015- 16 நிதியாண்டு முதல் 2019- 20 நிதியாண்டு வரையிலான கடன் / ஜிபிடி விகிதம், வட்டி கட்டுதல், வட்டி விகிதம் பரவல் ஆகியவை சாதகமற்றதாக உள்ளதாக
CAG , Centre, debt, interest burden,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: மத்திய அரசின் கடன் சுமை மற்றும் வட்டி சுமை தொடர்ந்து அதிகரித்து வருவது தொடர்பாக சிஏஜி எனப்படும் மத்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை கவலை தெரிவித்துள்ளது. பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அதன் அறிக்கையில், கடந்த 2015- 16 நிதியாண்டு முதல் 2019- 20 நிதியாண்டு வரையிலான கடன் / ஜிபிடி விகிதம், வட்டி கட்டுதல், வட்டி விகிதம் பரவல் ஆகியவை சாதகமற்றதாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2015 - 16ல் கடன் முதல் ஜிடிபி வரையிலான விகிதம் 52.30 சதவீதமாக உள்ளது. இதுவே, 2015 - 16 நிதியாண்டில் 50.5 சதவீதமாக இருந்தது. 2019 - 20 நிதியாண்டில், தனது வருமானத்தில் 34 சதவீதத்தை, தான் வாங்கிய கடனுக்காக வட்டியாக மத்திய அரசு செலுத்தியுள்ளது. ஆனால், 2015 - 16 நிதியாண்டில் இந்த விகிதம் 32 சதவீதமாக இருந்தது. 2016ம் நிதியாண்டில் சராசரியாக வட்டி கட்டியதற்கான செலவு 6.91 சதவீதத்தில் இருந்து 6.61 சதவீதமாக குறைந்துள்ளது. ஆனால், தொடர்ந்து கடன் வாங்கியதால் 2016ம் நிதியாண்டில் ரூ.4.57 லட்சம் கோடியில் இருந்து 2020ம் நிதியாண்டில் 6.55 லட்சம் கோடியாக அதிகரித்தது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news



இதனிடையே, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொருளாதார விவகாரங்கள் துறை வெளியிட்ட றிக்கையில், 2021ம் நிதியாண்டில் 6.80 லட்சம் கோடி வட்டியாக செலுத்தப்பட்டது. இது 2022ம் நிதியாண்டில் 6.80 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இந்த நிதியாண்டில், வருமானத்தில் 37 சதவீதம் வட்டி கட்டுவதற்காக செலவிடப்பட்டுள்ளது. 2022ல் ஒட்டுமொத்தமாக மத்திய அரசின் கடன் ரூ.128 லட்சம் கோடியாக உள்ளது. இது ஜிடிபியில் 54 சதவீதமாகும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
John Miller - Hamilton,பெர்முடா
12-ஆக-202220:17:16 IST Report Abuse
John Miller திருநெல்வேலிக்கே அல்வாவா? நிர்மலா சீதாராமனுக்கே பொருளாதாரம் பற்றி பாடமா?
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
12-ஆக-202220:02:28 IST Report Abuse
Ramesh Sargam இதுவும் ஒரு காரணமாக இருக்குமோ இன்றை விலைவாசி உயர்வுக்கு ...?
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
12-ஆக-202219:49:43 IST Report Abuse
Kasimani Baskaran 38000 கோடி சாராய வியாபரத்தில் லாபம் வந்துமே 6 லட்சம் கோடி கடனில் இருக்கும் தமிழக அரசை திருடர்களின் ஆதரவாளர்கள் கேள்வி கேட்க மாட்டார்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X