பிரதமராகும் எண்ணமில்லை: நிதிஷ்குமார்| Dinamalar

பிரதமராகும் எண்ணமில்லை: நிதிஷ்குமார்

Updated : ஆக 12, 2022 | Added : ஆக 12, 2022 | கருத்துகள் (19) | |
பாட்னா: பிரதமராகும் எண்ணம் எதுவும் மனதில் இல்லை என பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.பீஹார் முதல்வர் நிதிஷ்குமார், பா.ஜ., கூட்டணியை முறித்துவிட்டு, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியுடன் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளார். துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் பதவியேற்றுள்ளார். இதனை தொடர்ந்து பா.ஜ., - ஐக்கிய ஜனதா தளம் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. இரு கட்சிகளும் மாறி மாறி
Nitish Kumar, PM, நிதிஷ்குமார், பிரதமர், பாஜ, ஐக்கிய ஜனதா தளம்,

பாட்னா: பிரதமராகும் எண்ணம் எதுவும் மனதில் இல்லை என பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.



பீஹார் முதல்வர் நிதிஷ்குமார், பா.ஜ., கூட்டணியை முறித்துவிட்டு, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியுடன் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளார். துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் பதவியேற்றுள்ளார். இதனை தொடர்ந்து பா.ஜ., - ஐக்கிய ஜனதா தளம் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. இரு கட்சிகளும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றன.



latest tamil news


இந்நிலையில், நிருபர்களிடம் நிதிஷ்குமார் கூறுகையில், பிரதமராகும் எண்ணம் ஏதுவும் எனது மனதில் இல்லை. எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது தொடர்பாக ஏராளமான அழைப்புகள் வந்து கொண்டுள்ளன. விரைவில், அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபடுவோம் என்றார்.



latest tamil news


ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் ராஜிவ் ரஞ்சன் சிங் கூறுகையில், பிரதமர் பதவிக்கான போட்டியில் நிதிஷ்குமார் இல்லை. ஆனால், பிரதமராகும் அனைத்து தகுதிகளும் நிதிஷ்குமாருக்கு உண்டு. பீஹாரில் அமைச்சரவை அமைக்கப்பட்ட பிறகு, டில்லி சென்று , நாடு முழுவதும் பா.ஜ.,விற்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X