தண்டோரா போடும் முறைக்கு தடை: தலைமை செயலாளர் உத்தரவு| Dinamalar

தண்டோரா போடும் முறைக்கு தடை: தலைமை செயலாளர் உத்தரவு

Updated : ஆக 12, 2022 | Added : ஆக 12, 2022 | கருத்துகள் (10) | |
சென்னை: தண்டோரா போடும் முறைக்கு தடை உத்தரவு பிறப்பித்ததுடன் இதனை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளார். தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: அரசின் முக்கிய உத்தரவுகளை விளம்பரம் செய்வதை தமுக்கடிப்பினால் தண்டோரோ போடும் நடைமுறை இருந்து

சென்னை: தண்டோரா போடும் முறைக்கு தடை உத்தரவு பிறப்பித்ததுடன் இதனை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.



latest tamil news



தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: அரசின் முக்கிய உத்தரவுகளை விளம்பரம் செய்வதை தமுக்கடிப்பினால் தண்டோரோ போடும் நடைமுறை இருந்து வருகிறது. இந்த நடைமுறை தற்போது எந்தெந்த அரசு துறைகளில் நடைமுறையில் உள்ளதோ அதற்கு முழுமையாக தடை விதித்து உத்தரவிடப்படுகிறது. மாற்று ஏற்பாடாக அரசின் முக்கிய செய்திகளை விரைவாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு பொருத்தமான வாகனங்களில் ஒலி பெருக்கிகள் வைத்து மாநிலத்தின் கிராமப்புறங்களில் விளம்பரம் செய்வதை நடைமுறைப்படுத்தலாம்.

தண்டோரா போடும் பணியில் ஏதேனும் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தால் அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து கொடுப்பதை ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை உறுதி செய்ய வேண்டும்.


latest tamil news



தண்டோரா போடுவதற்கு விதிக்கப்பட்ட தடையை மீறி ஈடுபடுத்துபவர்கள் மீது கடுமயைான நடவடிக்கை மேற்கொள்ளவும், இந்த நடவடிக்கையை ஊராட்சி அமைப்புகள் வரை பரவலாக விழிப்புணர்வை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் ஏற்படுத்த வேண்டும் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X