தைவானுக்கு சீனா ஏற்படுத்தும் அச்சுறுத்தல்: இந்தியா கவலை

Updated : ஆக 12, 2022 | Added : ஆக 12, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி: “தைவானுக்கு சீனா ஏற்படுத்தும் அச்சுறுத்தல் கவலையளிக்கிறது; ஒருதலைப்பட்சமான இந்த நடவடிக்கையை சீனா கைவிட வேண்டும்,” என, வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார்.கிழக்காசிய நாடான தைவானை நம் அண்டை நாடான சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. தைவானை தன்னுடன் இணைக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்க
தைவான், சீனா,  அச்சுறுத்தல், இந்தியா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: “தைவானுக்கு சீனா ஏற்படுத்தும் அச்சுறுத்தல் கவலையளிக்கிறது; ஒருதலைப்பட்சமான இந்த நடவடிக்கையை சீனா கைவிட வேண்டும்,” என, வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார்.

கிழக்காசிய நாடான தைவானை நம் அண்டை நாடான சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. தைவானை தன்னுடன் இணைக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்க பார்லி., சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு வந்து சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த சீனா, தென் சீன கடல் பகுதியில் தைவான் ஜலசந்தியில் கடந்த வாரம் ராணுவ போர் பயிற்சியை துவங்கியது.


latest tamil news




இதையடுத்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சீனாவை எச்சரித்தன. ஆனால் சீனா கண்டுகொள்ளவில்லை. நான்கு நாள் என அறிவித்த போர் பயிற்சியை, அந்நாடு தேதி குறிப்பிடாமல் தொடர்ந்தது. இந்நிலையில், நம் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி நேற்று கூறியதாவது:

தைவானுக்கு சீனா ஏற்படுத்தி வரும் அச்சுறுத்தல் கவலையளிக்கிறது. ஒருதலைபட்சமான இந்த நடவடிக்கையை சீனா கைவிட வேண்டும். அமைதியை நிலைநாட்ட இந்தியா தயாராக இருக்கிறது. வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, கலாசாரம், கல்வி ஆகிய துறைகளில் தைவானுடனான உறவை இந்தியா மேம்படுத்தி வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-ஆக-202208:03:33 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் கவலை பட்டு என்ன பாசு பிரயோஜனம் ? ..... தைவானுக்கு ஆதரவா களத்தில் குதிக்க ரெடியா ?
Rate this:
Cancel
ஸ்டிக்கன் 2 - al-rayan,பஹ்ரைன்
13-ஆக-202205:59:19 IST Report Abuse
ஸ்டிக்கன்  2 உலகின் மற்றைய நாடுகள் எல்லாம் தைவான் தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X