முதல் காலாண்டில் எல்.ஐ.சி., லாபம் ரூ.683 கோடியாக சரிவு!

Updated : ஆக 12, 2022 | Added : ஆக 12, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
ஜூன் மாதத்துடன் முடிவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பொதுத் துறை நிறுவனமான எல்.ஐ.சி.,யின் லாபம் மார்ச் காலாண்டுடன் ஒப்பிடும் போது ரூ.683 கோடியாக சரிந்துள்ளது. கடந்த மார்ச் காலாண்டில் எல்.ஐ.சி.,யின் நிகர லாபம் ரூ.2,371.5 கோடியாக இருந்தது.கோவிட் மரணங்களால் காப்பீடு நிறுவனங்கள் கடுமையாக பாதிப்படைந்தன. முதல் மற்றும் இரண்டாம் அலைகளின் போது ஆயிரக்கணக்கானோர்
LIC, எல்ஐசி, Sensex, Nifty

ஜூன் மாதத்துடன் முடிவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பொதுத் துறை நிறுவனமான எல்.ஐ.சி.,யின் லாபம் மார்ச் காலாண்டுடன் ஒப்பிடும் போது ரூ.683 கோடியாக சரிந்துள்ளது. கடந்த மார்ச் காலாண்டில் எல்.ஐ.சி.,யின் நிகர லாபம் ரூ.2,371.5 கோடியாக இருந்தது.

கோவிட் மரணங்களால் காப்பீடு நிறுவனங்கள் கடுமையாக பாதிப்படைந்தன. முதல் மற்றும் இரண்டாம் அலைகளின் போது ஆயிரக்கணக்கானோர் குடும்பங்கள் ஆயுள் காப்பீடை கிளைம் செய்தது. இதனால் பல நூறு கோடி ரூபாய்களை காப்பீடு நிறுவனங்கள் வழங்க வேண்டி இருந்தது. அது நிறுவனங்களின் லாபத்தை பாதித்தது. தற்போது வழக்கமான நிலை திரும்பியுள்ளதால் காப்பீடு தொழில் கோவிட் பாதிப்பிலிருந்து மீண்டு வருகிறது.


latest tamil news


இந்நிலையில் எல்.ஐ.சி.,யின் முதல் காலாண்டு முடிவுகள் வெளியாகியுள்ளன. எல்.ஐ.சி., நிறுவனம் மே மாதம் பங்குச்சந்தையில் பட்டியலானது. அதன் பங்குகள் தொடர்ந்து 22 சதவீதம் அளவிற்கு சரிந்துள்ளது. ஏப்ரல் - ஜூன் வரையிலான முதல் காலாண்டில் எல்.ஐ.சி.,யின் நிகர லாபம் ரூ.682.89 கோடியாக உள்ளது. 2021ல் இதே காலக்கட்டத்தில் அதன் லாபம் வெறும் ரூ.2.94 கோடியாக இருந்தது. ஜூன் காலாண்டில் மொத்த வருவாய் ரூ.1,68,881 கோடியாக உள்ளது. 2021 ஜூன் காலாண்டில் இது ரூ.1,54,153 கோடியாக இருந்தது.

அதே சமயம் கடந்த ஜனவரி - மார்ச் காலாண்டுடன் ஒப்பிடும் போது லாபமும், வருவாயும் வெகுவாக குறைந்துள்ளது. மார்ச் காலாண்டில் எல்.ஐ.சி.,யின் லாபம் ரூ.2,371 கோடியாக இருந்தது. மொத்த வருமானம் ரூ.2,11,451 கோடியாக இருந்தது. நடப்பு காலாண்டில் எல்.ஐ.சி., 36.81 லட்சம் பாலிசிகளை விற்பனை செய்துள்ளது. எல்.ஐ.சி., நிர்வகிக்கும் சொத்துக்களின் மதிப்பு ரூ.41 லட்சம் கோடியாக உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-ஆக-202221:18:01 IST Report Abuse
ஆரூர் ரங் பங்குச் சந்தையில் அரசு 5 சதவீதத்தை நல்ல விலைக்குத்தான் விற்றுள்ளது.🤔 இப்போது 682 ரூ. க்கு சரிந்துள்ளது .வைத்திருக்கும் பொது முதலீட்டாளர்கள் லாபம் பார்க்க இரண்டு ஆண்டுகள் ஆகும். அதற்குள் தனியார் போட்டி இன்னும் அதிகரித்துவிடும். தனியார் இன்சூரன்ஸ் பங்குகளை வைததுள்ள முதலீட்டாளர்கள் மேலும் மேலும் பயனடைவார்கள்.
Rate this:
Cancel
12-ஆக-202221:10:10 IST Report Abuse
அப்புசாமி ஆரம்பத்தில் 900 ரூவாயா இருந்த பங்குகள் 600 கிட்டே சரியும்போதே, முதலீட்டாளர்களுக்கு இந்த விஷயம் தெரியும். இதில் பணத்தை இழந்தவர்கள் எல்.ஐ.சி பங்குகளை வாங்கிய சில்லறை முதலீட்டாளர்கள்தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X