எதன்மீதாவது மோதி அடிக்கடி காயம் ஏற்படுத்திக்கொள்ளும் நபரா நீங்கள்?

Updated : ஆக 12, 2022 | Added : ஆக 12, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
எதன்மீதாவது தெரியாமல் மோதி அடிக்கடி தனக்குத் தானே காயம் ஏற்படுத்திக்கொள்ளும் நபர்களை நாம் அன்றாட வாழ்க்கையில் அடிக்கடி சந்தித்து இருப்போம். இவர்கள் பொது இடத்தில் நடந்து செல்லும்போது கூட எதன்மீதாவது மோதி அடிபட்டுவிடுமோ என அச்சத்துடன் நடந்துசெல்வர். இதற்கு உளவியல் ரீதியான காரணமும் உண்டு. இதுகுறித்து உளவியல் மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் எனப் பார்ப்போம்.அதீத
காயம் ஏற்படும் நபர், நடை குறைபாடு, walking disorder, self wounding, self hurting disorder

எதன்மீதாவது தெரியாமல் மோதி அடிக்கடி தனக்குத் தானே காயம் ஏற்படுத்திக்கொள்ளும் நபர்களை நாம் அன்றாட வாழ்க்கையில் அடிக்கடி சந்தித்து இருப்போம். இவர்கள் பொது இடத்தில் நடந்து செல்லும்போது கூட எதன்மீதாவது மோதி அடிபட்டுவிடுமோ என அச்சத்துடன் நடந்துசெல்வர். இதற்கு உளவியல் ரீதியான காரணமும் உண்டு. இதுகுறித்து உளவியல் மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் எனப் பார்ப்போம்.

அதீத பதற்றம் கொண்டவர்கள் சில சமயங்களில் தடுமாறி கீழே விழுவது அல்லது எதன் மீதாவது மோதிக்கொள்வது போன்ற செயல்களில் அடிக்கடி ஈடுபடுவதாக கூறுகிறது உளவியல்.


latest tamil newsமன அழுத்தம் காரணமாக அன்றாட வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள் மீது கவனம் இருக்காது. மேலும் அடிக்கடி மனது வேறு ஏதாவது விஷயத்தை அசைபோட்டபடி இருப்பதால் சாலையில் நடந்து செல்லும்போது கூட கவனம் சாலை மீது இருக்காது. மனத்திரையில் வேறு ஏதாவதொரு விஷயம் ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில் இவர்கள் அடிக்கடி எதன்மீதாவது மோதி தங்களை காயப்படுத்திக் கொள்வதை வாடிக்கையாக வைத்திருப்பர்.

சிலருக்கு தான் எப்போதும் இதுபோல காயம் ஏற்படுத்திக்கொள்கிறோம் என்ற பயம் இருக்கும். இவர்கள் அதீத பாதுகாப்பு உணர்வோடு சாலையில் நடந்து செல்வர். இந்த நிலை காரணமாக இவர்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சம் கொள்வர்.


latest tamil newsஇதுபோன்ற வாக்கிங் டிஸ் ஆர்டர் குறைபாடு கொண்டவர்களுக்கு மன நல கவுன்சிலிங் தேவை. மேலும் இவர்களுக்கு இந்த பிரச்னையில் இருந்து வெளியேற, நல்ல நண்பர்களின் உதவியும் சுற்றத்தாரின் அரவணைப்பும் அவசியம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-ஆக-202208:01:21 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் இதுதான் திராவிட மாடல் என்று பீற்றிக்கொள்ளும் நபர்களுக்கு எந்தவிதமான மனநல பிரச்னை இருக்கக் கூடும் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X