சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து

Updated : ஆக 12, 2022 | Added : ஆக 12, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
நியூயார்க்: அமெரிக்காவில் பிரபல சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது மர்ம நபர் தாக்குதல் நடத்திய சம்பவம் நடந்துள்ளது.இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், சல்மான் ருஷ்டி. பிரபலமான எழுத்தாளராகிய, இவர் எழுதிய," சாத்தானின் வேதங்கள்' என்ற நூல், சர்வதேச அளவில், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில், இஸ்லாமுக்கு எதிரான விஷயங்கள் இடம் பெற்றிருப்பதாக கூறி, அவருக்கு எதிராக,
அமெரிக்கா  சல்மான் ருஷ்டி, தாக்குதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

நியூயார்க்: அமெரிக்காவில் பிரபல சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது மர்ம நபர் தாக்குதல் நடத்திய சம்பவம் நடந்துள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், சல்மான் ருஷ்டி. பிரபலமான எழுத்தாளராகிய, இவர் எழுதிய," சாத்தானின் வேதங்கள்' என்ற நூல், சர்வதேச அளவில், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில், இஸ்லாமுக்கு எதிரான விஷயங்கள் இடம் பெற்றிருப்பதாக கூறி, அவருக்கு எதிராக, கடும் போராட்டங்கள் நடந்தன.


latest tamil news



பயங்கரவாதிகளின் மிரட்டலால், வெளிநாடுகளில் பதுங்கி வாழும், பிரபல சர்ச்சை ஆங்கில எழுத்தாளர், சல்மான் ருஷ்டி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் , நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்ற வந்திருந்தார். அப்போது மேடையில் நின்றிருந்த சல்மான் ருஷ்டியை நோக்கி வந்த மர்மநபர் திடீரென கூர்மையான ஆயுதம் அல்லது கத்தியால் சல்மான் ருஷ்டி கழுத்தில் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமைடைந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

தாக்கிய நபரை அங்கிருந்த பாதுகாவலர்கள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். படுகாயமடைந்த அவரை ஹெலிகாப்டர் மூலம் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தாக்கிய நபர் குறித்தும் விசாரணை நடக்கிறது..

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - சென்னை,இந்தியா
13-ஆக-202217:33:33 IST Report Abuse
sankar ....
Rate this:
Cancel
13-ஆக-202208:12:42 IST Report Abuse
kulandai kannan ஈ.வெ.ராவும், கருணாநிதியும் அரேபியாவில் பிறந்திருத்தால்......
Rate this:
Ram - ,
13-ஆக-202210:41:38 IST Report Abuse
RamAmaidhi maargam kondrupanuga.Hindukkala avargal porumaiyaga iruppatharkku?...
Rate this:
Cancel
13-ஆக-202206:34:11 IST Report Abuse
அப்புசாமி சாத்தான்கள். குற்றியவர், குத்துப்பட்டவர், பாதுகாத்தவர் மூணுபேருக்கும்.பொருந்தும். அமெரிக்க பொது நூலகங்களில் satanic verses புத்தகம் சர்வசாதாரணம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X