சுதந்திர தின விழா பேரணி

Added : ஆக 12, 2022 | |
Advertisement
செங்கல்பட்டு அடுத்த நென்மேலியில் கோகுலம் பொதுப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஆண்டுதோறும் ஆக., 15ல் சுதந்திர தின விழா விமரிசையாக கொண்டாப்படும்.அதன்படி, 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், பள்ளி சார்பில், சுதந்திர தின விழிப்புணர்வு பேரணிநடந்தது.செங்கல்பட்டு சப் - கலெக்டர் சஜீவனா துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர் முனைவர் சங்கரநாராயணன் முன்னிலை
சுதந்திர தின விழா பேரணி

செங்கல்பட்டு அடுத்த நென்மேலியில் கோகுலம் பொதுப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஆண்டுதோறும் ஆக., 15ல் சுதந்திர தின விழா விமரிசையாக கொண்டாப்படும்.அதன்படி, 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், பள்ளி சார்பில், சுதந்திர தின விழிப்புணர்வு பேரணிநடந்தது.

செங்கல்பட்டு சப் - கலெக்டர் சஜீவனா துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர் முனைவர் சங்கரநாராயணன் முன்னிலை வகித்தார்.செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கோகுலம் பள்ளி வரை 5 கி.மீ., துாரம் நடந்த பேரணியில், 1,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

இதில், தேசியக்கொடியை பிடித்து சென்ற மாணவர்கள், 'ஒளி படைத்த கண்ணினாய் வா... வா! உறுதிகொண்ட நெஞ்சினாய் வா... வா!' என பாரதியாரின் வரிகளை பாடினர். மாணவர்கள், தேச தலைவர்கள் போல் மாறுவேடத்தில் வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.பள்ளி இயக்குனர் கோபாலன், துணை இயக்குனர் பிரவின் மற்றும் தாளாளர் லிஜிஷா பிரவின் ஆகியோர், அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்தனர்.

- நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X