சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

ஆவின் தண்ணீர் பாட்டில் விற்பனைக்கு வருமா?

Added : ஆக 12, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
ஆவின் தண்ணீர் பாட்டில் விற்பனைக்கு வருமா?''படம் காட்டப் போறாவ வே...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், அண்ணாச்சி.''இப்பதான் எல்லாரும் மொபைல் போன்லயே விதவிதமா படம் பார்த்துட்டு இருக்காங்களே... இன்னும் என்ன படத்தை, யார் காட்டப் போறாங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கோலாகலமா கொண்டாட மத்திய பா.ஜ., அரசு ஏற்பாடுகள் பண்ணிட்டு

 டீ கடை பெஞ்ச்


ஆவின் தண்ணீர் பாட்டில் விற்பனைக்கு வருமா?


''படம் காட்டப் போறாவ வே...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், அண்ணாச்சி.

''இப்பதான் எல்லாரும் மொபைல் போன்லயே விதவிதமா படம் பார்த்துட்டு இருக்காங்களே... இன்னும் என்ன படத்தை, யார் காட்டப் போறாங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கோலாகலமா கொண்டாட மத்திய பா.ஜ., அரசு ஏற்பாடுகள் பண்ணிட்டு இருக்குல்லா... தமிழக பா.ஜ., சார்புல வாகன பேரணி, சைக்கிள் பேரணி, வீடுகளுக்கு, 50 லட்சம் தேசிய கொடிகள் வினியோகம்னு பல வேலைகள் நடக்கு வே...

''அந்த வரிசையில சிவாஜி நடிச்ச, வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் படங்களை தமிழகத்துல இருக்கிற 50 முக்கிய நகரங்கள்ல, இளைஞர்களுக்கு இலவசமா திரையிட்டு காட்ட ஏற்பாடு பண்ணியிருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''கட்சியை, காங்கிரஸ்ல இணைக்க போறாரு பா...'' என, அடுத்த தகவலுக்கு மாறிய அன்வர்பாயே தொடர்ந்தார்...

''மறைந்த தமிழக காங்., முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, காங்கிரஸ்ல ஏற்பட்ட கசப்பால சில காலம், தமிழக இந்திரா காங்கிரஸ்னு ஒரு கட்சியை நடத்தினாருல்லா... இந்தக் கட்சியை, இப்ப அவரது மருமகன் ராஜ்மோகன், 'லட்டர் பேடு' அளவுல நடத்திட்டு இருக்காரு பா...

''சீக்கிரமே, இந்தக் கட்சியை காங்கிரஸ்ல கரைக்க போறாரு... 'இணைப்பு விழாவை டில்லியில நடத்துறதா அல்லது ராகுல் தமிழகம் வர்றப்ப நடத்துறதா'ன்னு, ரூம் போட்டு யோசனை பண்ணிட்டு இருக்காரு பா...'' என்றார் அன்வர்பாய்.

''அப்ப, தமிழகத்துல ஆட்சியை பிடிக்கற அளவுக்கு காங்கிரஸ் பலம் கூடிடும்னு சொல்லும்...'' என கிண்டலாக சிரித்த குப்பண்ணாவே, ''தண்ணியையும், பாலையும் சேர்த்தா என்னாகும் ஓய்...'' எனக் கேட்டு நிறுத்தினார்.

''பால், பாழா போயிடுமுல்லா...'' என்றார், அண்ணாச்சி.

''ஆவின் நிறுவனம் சார்புல, தண்ணீர் பாட்டில் தயாரிச்சு விக்கப் போறதா, அமைச்சர் நாசர் சமீபத்துல அறிவிச்சாரோல்லியோ... தமிழகத்துல இருக்கற ஆவினுக்கு சொந்தமான, 18 பண்ணைகள்ல இந்த தண்ணீர் பாட்டிலை தயாரிக்க முடிவு பண்ணியிருக்கா ஓய்...

''ஆனா, உணவு பாதுகாப்பு விதிகளின்படி, பால் தயாரிக்கற இடத்துல, அதன் கலப்பட பொருளான தண்ணீர் இருக்கவேப்படாது... அதுவும் இல்லாம, அரசியல்ல முதன்மை பதவியில இருக்கற ஒருத்தரின் மனைவி, தண்ணீர் பாட்டில் தயாரிக்கற தொழிற்சாலையை பல வருஷங்களா நடத்துறாங்க ஓய்...

''ஆவின் தண்ணீரை, அரசு நிறுவனங்களுக்கு பெருமளவுல வாங்க ஆரம்பிச்சுட்டா, அவங்க வியாபாரம் படுத்துடுமோன்னோ... அவங்களும் ஆவின் தண்ணீருக்கு எதிரா காய் நகர்த்திண்டு இருக்காங்க ஓய்...

''அதனால, 'ஆவின் பால் எடை குறைவு பிரச்னையை திசை திருப்பவே, ஆவின் தண்ணீர்னு அமைச்சர் அடிச்சு விட்டார்... ஆவின் தண்ணீர் வரது எல்லாம் டவுட்தான்'னு அந்த துறை அதிகாரிகளே பேசிக்கறா ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''ஒரு பிரச்னையை திசை திருப்புறதுல, தி.மு.க.,வினரை அடிச்சுக்க ஆளே இல்லை பா...'' என்றபடியே, அன்வர்பாய் எழ, மற்றவர்களும் எழுந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
15-ஆக-202200:24:56 IST Report Abuse
Anantharaman Srinivasan வாழப்பாடி ராமமூர்த்தி கட்சியையும் இணைத்தால் தமிழகத்துல ஆட்சியை பிடிக்கற அளவுக்கு காங்கிரஸ் பலம் கூடிடும்.
Rate this:
Cancel
S.Ganesan - Hosur,இந்தியா
13-ஆக-202209:27:57 IST Report Abuse
S.Ganesan ஆவின் பாலே தண்ணீராகத்தான் இருக்கிறது. இதில் தனியாக தண்ணீர் தேவை இல்லை
Rate this:
Cancel
John Miller - Hamilton,பெர்முடா
13-ஆக-202200:59:17 IST Report Abuse
John Miller புதிய மின்சார சட்டத்தின் பிரச்சனையில் இருந்து மக்களின் பிரச்சனையை திசை திருப்பவே ரஜினியை கவர்னரை சந்திக்க வைத்ததுதான் மிக சிறப்பான சம்பவம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X