கோஷ்டி மோதலில் இருவர் பலி கொப்பாலில் 144 தடை உத்தரவு

Added : ஆக 12, 2022 | |
Advertisement
கொப்பால்:காதல் திருமணம் விவகாரத்தில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில், இரண்டு பேர் கொலை செய்யப்பட்டதால் கொப்பால் அருகே உள்ள கிராமத்தில், வரும் 20ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கொப்பாலின் கனககிரி அருகே உள்ள ஹுலிஹைதர் கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர், வேறு ஜாதி பெண்ணை, சில நாட்களுக்கு முன் காதல் திருமணம் செய்தார். அவர்கள் எங்கு உள்ளனர் என்பது
கோஷ்டி மோதலில் இருவர் பலி கொப்பாலில் 144 தடை உத்தரவு

கொப்பால்:காதல் திருமணம் விவகாரத்தில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில், இரண்டு பேர் கொலை செய்யப்பட்டதால் கொப்பால் அருகே உள்ள கிராமத்தில், வரும் 20ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொப்பாலின் கனககிரி அருகே உள்ள ஹுலிஹைதர் கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர், வேறு ஜாதி பெண்ணை, சில நாட்களுக்கு முன் காதல் திருமணம் செய்தார். அவர்கள் எங்கு உள்ளனர் என்பது தெரியவில்லை.இந்நிலையில், நேற்று முன்தினம் இது தொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த இரு பிரிவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கோஷ்டி மோதலாக மாறியது.
இரு தரப்பினரும் கல், கட்டையால் தாக்கி கொண்டனர்.கத்தி குத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், யங்கப்பா, 60, பாஷாவலி, 22, ஆகிய இரண்டு பேர் உயிரிழந்தனர்.இதையடுத்து, கிராமத்தில் பதற்றம் நிலவுவதால் வரும் 20ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில், 58 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.இரு பிரிவினரும் பரஸ்பரம் புகார் செய்துள்ளனர்.'இந்த கோஷ்டி மோதலுக்கு, காங்கிரசின் முன்னாள் அமைச்சர் சிவராஜ் தங்கடகியின் உதவியாளர் தான் காரணம்' என கிராமத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர்.கொப்பால் அருகே ஹுலிஹைதர் கிராமத்தில், பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள போலீஸ் வேன்கள்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X