இதே நாளில் அன்று

Added : ஆக 12, 2022 | |
Advertisement
ஆகஸ்ட் 13, 1963 விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டியில், அய்யப்பன் -- ராஜேஸ்வரி தம்பதிக்கு மகளாக, 1963ல் இதே நாளில் பிறந்தவர் ஸ்ரீதேவி. முதன் முதலாக, 1967ல், கந்தன் கருணை திரைப்படத்தில், முருகன் வேடமிட்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், 1976ல், ரஜினி நடித்த மூன்று முடிச்சு திரைப்படத்தில்

இதே நாளில் அன்று


ஆகஸ்ட் 13, 1963



விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டியில், அய்யப்பன் -- ராஜேஸ்வரி தம்பதிக்கு மகளாக, 1963ல் இதே நாளில் பிறந்தவர் ஸ்ரீதேவி. முதன் முதலாக, 1967ல், கந்தன் கருணை திரைப்படத்தில், முருகன் வேடமிட்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், 1976ல், ரஜினி நடித்த மூன்று முடிச்சு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். கமலுடன் நடித்த 16 வயதினிலே புகழ் தேடித் தந்தது.
தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து புகழ் பெற்றார். 1978ல், சோல்வா சாவன் படத்தில் ஹிந்தியில் நுழைந்து, ஹிம்மத்வாலாவில் வெற்றி பெற்றார். இவர், 1996 ஜூன் 2ல், படத் தயாரிப்பாளர் போனிகபூரை மணந்து, சினிமாவிலிருந்து விலகினார். 14 ஆண்டுகளுக்கு பின், இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தில் மீண்டும் நடித்தார். இவருக்கு, 'நந்தி, டொரோண்டோ, பிலிம்பேர்' உள்ளிட்ட விருதுகளுடன், 'பத்மஸ்ரீ' விருதும் கிடைத்தது. 300 படங்களுக்கு மேல் நடித்த ஸ்ரீதேவி, 2018 பிப்ரவரி 2௪ல், தன் 54வது வயதில் மறைந்தார்.
பாலிவுட்டை கலக்கிய கோலிவுட் தாரகையின் பிறந்த தினம் இன்று!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X