நாடு முழுதும் தாக்குதல் நடத்த சதி அதிர்ச்சி!

Updated : ஆக 14, 2022 | Added : ஆக 12, 2022 | கருத்துகள் (27+ 10) | |
Advertisement
புதுடில்லி :சுதந்திர தின விழா கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் வகையில் நாடு முழுதும் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியதாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து, 2,500 தோட்டாக்கள் மற்றும் வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. டில்லி போலீசாரின் அதிரடி வேட்டையில் இவர்கள் சிக்கினர். நாடு முழுதும், 75வது சுதந்திர தின ஆண்டு கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன.
அதிர்ச்சி!   நாடு முழுதும், தாக்குதல்,சதி

புதுடில்லி :சுதந்திர தின விழா கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் வகையில் நாடு முழுதும் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியதாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து, 2,500 தோட்டாக்கள் மற்றும் வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. டில்லி போலீசாரின் அதிரடி வேட்டையில் இவர்கள் சிக்கினர். நாடு முழுதும், 75வது சுதந்திர தின ஆண்டு கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன.



6 பேர் கைது



வரும் 15ல், தலைநகர் டில்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க செங்கோட்டையில், பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்ற உள்ளார்.
சுதந்திர தின கொண்டாட்டங்களில் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் தடுக்க, நாடு முழுதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தலைநகர் டில்லியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது; ரோந்து பணியும் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.
இந்நிலையில் டில்லி போலீசார், ஆறு பேரை கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து ஏராள மான வெடி பொருட்கள், 2,500 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

இது குறித்து, டில்லி போலீசார் கூறியதாவது:

சுதந்திர தின விழாவையொட்டி, கடந்த சில நாட்களாகவே கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. சமீபத்தில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஒருவர் டில்லியில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், ஆனந்த விஹார் ரயில்வே ஸ்டேஷன் அருகே சந்தேகத்திற்குரிய வகையில் இருவர் நடமாடுவதாக, சமீபத்தில் ஆட்டோ டிரைவர் ஒருவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து அங்கு சென்ற போலீசார், அஜ்மல் கான், ரஷீத் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்கள் வைத்திருந்த 'டிராலி' பையைச் சோதனையிட்டதில், 2,500 தோட்டாக்கள் மற்றும் வெடி பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இருவரும் உத்தர பிரதேச மாநிலம் ஜான்பூரைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.


சதி திட்டம்



இந்த வெடி பொருட்களை, உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் தங்களிடம் கொடுத்து, உ.பி., மாநிலம் லக்னோவில் உள்ள ஒருவரிடம் ஒப்படைக்கும்படி கூறியதாக இருவரும் தெரிவித்தனர்.இதன் அடிப்படையில், உ.பி.,யில் நடத்திய வேட்டையில் சதாம் என்பவர் சிக்கினார். மற்றொரு போலீஸ் படை, உத்தரகண்ட் மாநிலத்துக்கு விரைந்தது. இதில், டேராடூனில் வெடி மருந்து மற்றும் துப்பாக்கிகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வரும் பரிக் ஷித் நேகி என்பவர் கைது செய்யப்பட்டார். இவர், ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் கம்ரான், நாசர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஒரு குழுவாக இணைந்து, ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
சுதந்திர தின விழா கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் வகையில், நாடு முழுதும் தாக்குதல் நடத்துவதற்கான சதித் திட்டங்களை இவர்கள் தீட்டியிருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து, கிழக்கு டில்லி துணை போலீஸ் கமிஷனர் பிரியங்கா காஷ்யப் கூறியதாவது:

கைது செய்யப்பட்ட ஆறு பேரும் குற்றப் பின்னணி உடையவர்கள். இவர்களிடமிருந்த வெடி பொருட்கள், தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பயங்கரவாத செயல்களில் இவர்களுக்கு தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (27+ 10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.M.Muthu - Guangzhou,சீனா
13-ஆக-202219:46:52 IST Report Abuse
R.M.Muthu ....
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
13-ஆக-202216:01:36 IST Report Abuse
Natarajan Ramanathan கான்கிராஸ் கும்பல் எதிர்கட்சியாக இருக்கும்வரை இந்தியாவுக்கு எந்த ஆபத்தும் இல்லை...
Rate this:
Cancel
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
13-ஆக-202215:23:26 IST Report Abuse
MARUTHU PANDIAR இவனுகளிடம் ஒன்று அல்லது இரண்டு மணிகளில் கறக்க வேண்டிய தகவல்களை கறந்து விட்டு ,,அடுத்த நிமிஷம் போட்டுத் தள்ளும் வழக்கத்தை உடனே மேற் கொள்ள வேண்டும்+++++இப்படியே பழைய மெத்தடில் போய்க்கிட்டிருந்தால் அவனுகளுக்கு இளக்காரமாகத் தான் இருக்கும்++++++இந்த முறை பிடி பட்டது சாதாரண விஷயமா? இந்நேரம் சுட்டுக் பொசுக்கியிருக்க வேண்டாமா? என நடை முறையோ என்ன கண்றாயோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X