'யானைகளால் வனம் வளமாக இருக்கும்'

Added : ஆக 12, 2022 | |
Advertisement
கோவை : உலக யானைகள் தினத்தை முன்னிட்டு, பள்ளி, கல்லுாரி மாணவர்கள் யானை முகமூடி அணிந்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர். பல்வேறு பள்ளி, கல்லுாரியை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் யானை முகம் பொறித்த முகமூடியை அணிந்து, பேரணியில் பங்கேற்றனர். யானைகள், யானைகளை பாதுகாக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர். வடகோவை பகுதியில் உள்ள வன அலுவலகத்தில் துவங்கிய பேரணி,
'யானைகளால் வனம் வளமாக இருக்கும்'



கோவை : உலக யானைகள் தினத்தை முன்னிட்டு, பள்ளி, கல்லுாரி மாணவர்கள் யானை முகமூடி அணிந்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர். பல்வேறு பள்ளி, கல்லுாரியை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் யானை முகம் பொறித்த முகமூடியை அணிந்து, பேரணியில் பங்கேற்றனர். யானைகள், யானைகளை பாதுகாக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர். வடகோவை பகுதியில் உள்ள வன அலுவலகத்தில் துவங்கிய பேரணி, ஆர்.எஸ்.புரம், லாலி ரோடு வழியாக மீண்டும் அலுவலகத்தை அடைந்தது. பேரணியை, கோவை மாவட்ட வன அலுவலர் அசோக் குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அவர் கூறுகையில், ''யானைகள் இருந்தால் வனமும், வளமாக இருக்கும். சமீப காலத்தில் யானைகள் உயிரிழப்பு அதிகரித்து வருவது குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ரயில் மோதி யானைகள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, அதை தடுக்க ரயில்வே துறையும் ஒத்துழைப்பு நல்கி வருகிறது. ரயில் பாதையில் யானைகள் நடமாடும் இடத்தில், மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. ரயில்பாதையின் இருபுறங்களிலும், 15 மீட்டர் அகலத்துக்கு துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. வனத்துறையை சேர்ந்த, 19 அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்,'' என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X