இட்லிகள் பல விதம்; ஒவ்வொன்றும் ஒரு விதம்!

Added : ஆக 12, 2022 | |
Advertisement
கோவையில் நேற்று நடந்த பாரம்பரிய இட்லி கண்காட்சியில் இடம் பெற்றிருந்த வகை வகையான இட்லிகள், பார்வையாளர்களை ஆச்சர்யப்பட வைத்தன.உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில், நேற்று 'ஈட் ரைட் மேளா' நடந்தது. இதில் பாரம்பரிய உணவு வகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றில், பல வகை இட்லிகளும் இடம் பெற்றிருந்தன. பல வடிவங்களில், மஞ்சள், பச்சை, சிகப்பு என பல வண்ணங்களும் கொண்ட
இட்லிகள் பல விதம்; ஒவ்வொன்றும் ஒரு விதம்!



கோவையில் நேற்று நடந்த பாரம்பரிய இட்லி கண்காட்சியில் இடம் பெற்றிருந்த வகை வகையான இட்லிகள், பார்வையாளர்களை ஆச்சர்யப்பட வைத்தன.

உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில், நேற்று 'ஈட் ரைட் மேளா' நடந்தது. இதில் பாரம்பரிய உணவு வகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றில், பல வகை இட்லிகளும் இடம் பெற்றிருந்தன. பல வடிவங்களில், மஞ்சள், பச்சை, சிகப்பு என பல வண்ணங்களும் கொண்ட இட்லிகள் வைக்கப்பட்டிருந்தன. அவை எந்தெந்த தானியங்கள், பழங்களை கொண்டு தயார் செய்யப்பட்டிருந்தன என்ற விளக்கமும் கூடவே இருந்தது.

இட்லிகளை தயார் செய்து, காட்சிக்கு வைத்திருந்த மல்லிப்பூ இட்லி நிறுவன உரிமையாளர் முத்து, கோவை கணுவாயை சேர்ந்தவர்.அவர் கூறுகையில், ''குழந்தைகள், பீட்ரூட், கேரட் போன்ற காய்கறிகளை தனியாக கொடுத்தால் சாப்பிடுவதில்லை. அவற்றை மிக்சியில் அரைத்து, இட்லியாக தயார் செய்து பல வண்ணங்களில் தரும்போது விரும்பி சாப்பிடுகின்றனர்.அதேபோலத்தான் தானியங்கள், பழ வகைகளை பயன்படுத்தியும் இட்லி தயார் செய்கிறோம். 2500 வகை இட்லிகளை தயார் செய்ய முடியும்.

இட்லியை வழக்கமான வடிவத்தில் செய்யாமல், ஹார்ட்டின் வடிவம் போன்ற பிற வடிவங்களில் செய்யும்போது, பலருக்கும் சாப்பிட ஆர்வம் மேலிடுகிறது.மக்கள் மத்தியில் சத்தான இயற்கை உணவு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி வகை வகையான இட்லிகளை தயார் செய்கிறோம். பல மாணவர்களுக்கு கம்பு எவை, ராகி எவை என்று தெரிவதில்லை. அவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதன் மூலம், நமது பாரம்பரிய உணவுப் பழக்கத்தை மீட்க முடியும்,'' என்கிறார்.

இவ்வளவு நன்மையா!

ஒவ்வொரு இட்லியும் சாப்பிடுவதால், கிடைக்கும் பலன்கள் என்றொரு பட்டியலையும் வைத்திருந்தனர். n ஆப்பிள் இட்லி சாப்பிடுவதால் கண்புரை ஏற்படுவதை குறைக்கலாம்; ஞாபக சக்தி அதிகரிக்கும்.n காளான் இட்லியில் அதிக புரோட்டீன், மினரல்கள் இருக்கின்றன. n வாழைக்காய் இட்லி, இதயத்துக்கு பாதுகாப்பு அளிக்கிறது. n கொய்யா இட்லி, புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது. n பூசணி இட்லி, நார்ச்சத்து, வைட்டமின் ஈ, புரதம், இரும்புச்சத்து, மக்னீசியம் உள்ளிட்ட தாதுச்சத்துக்களை கொண்டது.n பப்பாளி இட்லியால் வைட்டமின் ஏ சத்து கிடைக்கும். சிறுநீர் கல்லை கரைக்க உதவும்.இப்படி மருத்துவ பயன்களையும் கூறுகிறார் முத்து. நிஜமாகவே இத்தனை பலன்கள் கிடைக்கிறதோ இல்லையோ, புரோட்டா, பிரியாணி போல் உடலுக்கு கேடு வராது என்பது நிச்சயம்.




புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X