ஓட்டு இயந்திரத்துக்கு எதிரான மனு தள்ளுபடி

Updated : ஆக 12, 2022 | Added : ஆக 12, 2022 | |
Advertisement
புதுடில்லி :தேர்தல்களில் ஓட்டுச் சீட்டுக்கு பதிலாக ஓட்டுப் பதிவு இயந்திரத்தை பயன்படுத்த அனுமதிக்கும் சட்டப் பிரிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. டில்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.எல்.சர்மா, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டதாவது: தேர்தல்களில் ஓட்டுச் சீட்டுக்கு பதிலாக ஓட்டுப் பதிவு இயந்திரத்தை
ஓட்டு இயந்திரத்துக்கு எதிரான மனு தள்ளுபடி


புதுடில்லி :தேர்தல்களில் ஓட்டுச் சீட்டுக்கு பதிலாக ஓட்டுப் பதிவு இயந்திரத்தை பயன்படுத்த அனுமதிக்கும் சட்டப் பிரிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. டில்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.எல்.சர்மா, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டதாவது:


latest tamil news




தேர்தல்களில் ஓட்டுச் சீட்டுக்கு பதிலாக ஓட்டுப் பதிவு இயந்திரத்தை பயன்படுத்த அனுமதிக்கும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின், 61ஏ பிரிவை எதிர்த்து இந்த மனுவை தாக்கல் செய்துள்ளேன். இந்த சட்டம், லோக்சபாவிலோ, ராஜ்யசபாவிலோ ஓட்டுடெப்பு வாயிலாக நிறைவேற்றப்படவில்லை. எனவே இந்த சட்டப் பிரிவை செல்லாது என்றும், அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு, நீதிபதிகள் எஸ்.கே.கவுல், எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு விசாரணைக்கு ஏற்றதல்ல என கூறி, நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X