திருச்செந்தூரில் சத்ரு சம்ஹார யாகம்: சபரீசன் வேண்டுதல் பலிக்குமா?| Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

திருச்செந்தூரில் சத்ரு சம்ஹார யாகம்: சபரீசன் வேண்டுதல் பலிக்குமா?

Updated : ஆக 12, 2022 | Added : ஆக 12, 2022 | கருத்துகள் (23) | |
திருச்செந்துார் கோவிலில் உள்ள குகை சன்னதியில், சத்ரு சம்ஹார யாகம் நடத்தினால், எதிரிகள் வீழ்வர்' என, அரசியல்வாதிகள் பலருக்கும் ஆரூடம் சொல்லப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் பலரும் திருச்செந்துார் சென்று யாகம் நடத்துவது வாடிக்கையாகி வருகிறது.அந்த வகையில், முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன், சமீபத்தில் திருச்செந்துார் கோவிலுக்கு சென்று, சத்ரு சம்ஹார யாகம்
திருச்செந்துார்  சத்ரு சம்ஹார யாகம்: சபரீசன்  பலிக்குமா?

திருச்செந்துார் கோவிலில் உள்ள குகை சன்னதியில், சத்ரு சம்ஹார யாகம் நடத்தினால், எதிரிகள் வீழ்வர்' என, அரசியல்வாதிகள் பலருக்கும் ஆரூடம் சொல்லப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் பலரும் திருச்செந்துார் சென்று யாகம் நடத்துவது வாடிக்கையாகி வருகிறது.
அந்த வகையில், முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன், சமீபத்தில் திருச்செந்துார் கோவிலுக்கு சென்று, சத்ரு சம்ஹார யாகம் நடத்தினார்.


புது தகவல்ஆனால், 'அரசியல்வாதிகள் இப்படியொரு யாகம் செய்தால், அவர்களின் வாழ்க்கையில் துன்பங்கள் தான் வந்து சேர்கின்றன. ஏற்கனவே யாகம் செய்த அரசியல்வாதிகளின் வாழ்க்கை நிகழ்வுகளை பார்த்தாலே இது புரியும்' என்ற புது தகவல் பரவி வருகிறது.


பெரிய ஏற்றம் இல்லைஇது குறித்து, திருச்செந்துாரில் சத்ரு சம்ஹார யாகம் செய்த அரசியல் பிரமுகர் ஒருவர் கூறியதாவது:ஏதோ ஒரு விஷயத்தை அடிப்படையாக வைத்து தான், ஜோதிடர்கள், அரசியல்வாதிகளிடம் திருச்செந்துாரில் சத்ரு சம்ஹார யாகம் செய்ய சொல்கின்றனர். எதிரிகள் வீழ்வர் என்பது,அதில் ஒரு நம்பிக்கையாக உள்ளது.

அந்த அடிப்படையில் தான், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, யாகம் நடத்தினர். இலங்கையின் முன்னாள் அதிபர்கள் மகிந்த ராஜபக்சே, கோத்தபய ராஜபக்சே உள்ளிட்ட அந்நாட்டு அரசியல் பிரமுகர்கள் பலரும் இதை செய்துள்ளனர். சசிகலா குடும்பத்தை சேர்ந்த தினகரன், திவாகரன், சுதாகரன் உள்ளிட்ட பலர் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அ.தி.மு.க., தலைவர்களும் யாகம் செய்துள்ளனர். ஆனால், யாகம் நடத்திய பின், இவர்களில் பலருக்கும் அரசியல் ரீதியில் பெரிய ஏற்றம் இல்லை என்பது, அன்றாட அரசியல் நிகழ்வுகளை கவனிப்பவர்களுக்கு புரியும்.


அரசியல் யாகம்தி.மு.க., அரசியல் பிரமுகர்கள் சிலர், திருச்செந்துாரில் யாகம் நடத்த விரும்பினர். ஆனால், அது விமர்சனத்துக்கு உள்ளாகும் என்பதால் தவிர்த்து விட்டனர். எனவே, அவர்கள் அரசியல் வாழ்கையில் சிக்கல் எதுவும் இல்லை. சபரீசன் உள்பட சமீபத்தில் திருச்செந்துாரில் யாகம் நடத்திய அரசியல் பிரமுகர்களுக்கு இப்படியொரு, 'சென்டிமென்ட்' இருப்பது குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவ்வாறு அந்த அரசியல் பிரமுகர் கூறினார். -

பழனிசாமி மனைவி ராதா திடீர் யாக பூஜை!

முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசனை தொடர்ந்து, எதிரிகளை வெல்வதற்கு சத்ரு சம்ஹார மந்திர பூஜையை, அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமி மனைவி ராதா செய்துள்ளார்.முன்னாள் முதல்வர் பழனிசாமி மனைவி ராதா, நேற்று முன்தினம் திருச்செந்துார் முருகன் கோவிலில் தரிசனம் செய்தார். பின், எதிரிகளை வெல்வதற்கும், நோய்கள் தீரவும், சத்ரு சம்ஹார வேல் மந்திர பூஜை நடத்தினார். சபரீசன் தரப்பில் யாகம் நடத்தப்பட்டது; ஆனால், ராதா தரப்பில் யாகம் நடத்தாமல், மந்திர பூஜை நடத்தப்பட்டது. பவுர்ணமி அன்று இரவு, திருச்செந்துார் முருகனை வழிபடுவதால், பக்தர்கள் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம். அதன்படி நேற்று முன்தினம் இரவு 7:00 மணி வரை, பழனிசாமி மனைவி ராதா, சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார். முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு உள்ளிட்ட அ.தி.மு.க., நிர்வாகிகளும் பங்கேற்றனர். ராதாவின் மந்திர பூஜை முடியும் வரை, பக்தர்களை அனுமதிக்காமல் காக்க வைத்தனர்.


-- நமது நிருபர் --

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X