2 மூடிகளுடன் முதுமக்கள் தாழி ஆதிச்சநல்லூரில் அகழாய்வு தீவிரம்

Added : ஆக 13, 2022 | |
Advertisement
திருநெல்வேலி: ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆய்வில் முதன்முறையாக இரண்டு மூடிகளுடன் முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.உலோகங்களை பிரித்தறியும் கருவி களுடன் ஆய்வு பணி தீவிமடைந்துள்ளது.தூத்துக்குடிமாவட்டம் தாமிரமணி கரையில் ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல்துறையினர் நடத்திவரும் அகழாய்வில் 80-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள்
 2 மூடிகள் , முதுமக்கள் தாழி ஆதிச்சநல்லூர்  அகழாய்வு தீவிரம்

திருநெல்வேலி: ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆய்வில் முதன்முறையாக இரண்டு மூடிகளுடன் முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலோகங்களை பிரித்தறியும் கருவி களுடன் ஆய்வு பணி தீவிமடைந்துள்ளது.

தூத்துக்குடிமாவட்டம் தாமிரமணி கரையில் ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல்துறையினர் நடத்திவரும் அகழாய்வில் 80-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன.வாழ்விடப்பகுதிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு 3.5 செ.மீ. அளவுடைய தங்க நெற்றிப்பட்டம் கண்டுபிடிக்கப்பட்டது. அதே குழியில் 9 அம்புகள், வாள், சூலம் தொங்கட்டான் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்துள்ளன.நேற்று முதல்முறையா 2 மூடிகள் கொண்ட முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது. முதுமக்கள் தாழிகளில் உள்ள எலும்புகளை ஆய்வு செய்ய புனே டெக்கான் கல்லூரி மானுடவியல் ஆய்வாளர் வீனாக முனு்ஷிப் வந்துள்ளார்.இதன் மூலம் எலும்புகளின் துல்லிய கால அளவீடுகள் தெரியவரும்.மேலும் உலோப்பெருட்களை ஆய்வு செய்ய கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த 3 பேர் குழுவினர் வந்துள்ளனர். லாண்டா கருவி மூலம் உலோக பொருட்களை ஆய்வு செய்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X