சரக்கு ஆட்டோ லாரி மோதி குழந்தை உட்பட 2 பேர் பலி

Added : ஆக 13, 2022 | |
Advertisement
துாத்துக்குடி:திருவேங்கடம் அருகே சரக்கு ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில், எட்டு மாத குழந்தை, இளம்பெண் பலியாகினர்.தென்காசி மாவட்டம், புளியங்குடியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன், 39. அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் குடும்பத்தினர் உட்பட, 18 பேர் சரக்கு ஆட்டோவில், விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர்.திருவேங்கடம் அருகே சிப்பிப்பாறையில், எதிரே

துாத்துக்குடி:திருவேங்கடம் அருகே சரக்கு ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில், எட்டு மாத குழந்தை, இளம்பெண் பலியாகினர்.

தென்காசி மாவட்டம், புளியங்குடியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன், 39. அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் குடும்பத்தினர் உட்பட, 18 பேர் சரக்கு ஆட்டோவில், விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர்.

திருவேங்கடம் அருகே சிப்பிப்பாறையில், எதிரே மார்த்தாண்டத்தில் இருந்து திருவேங்கடம் நோக்கி சென்ற டிப்பர் லாரி, லோடு ஆட்டோ மீது மோதியது.இதில், ராஜதுரை என்பவரின் எட்டு மாத ஆண் குழந்தை கபிலேஷ் குமார், மணிகண்டன் மனைவி கிருஷ்ண லீலாவதி, 28, ஆகியோர் பலியாகினர். படுகாயமடைந்த ஏழு பேர், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.திருவேங்கடம் போலீசார் விசாரித்து, டிப்பர் லாரி டிரைவர் சிவராஜை கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X