நொய்டா இரட்டை கோபுரங்கள் ஆக., 28ல் இடிக்க கோர்ட் கெடு

Updated : ஆக 13, 2022 | Added : ஆக 13, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
புதுடில்லி :உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட 40 மாடிகளை உடைய இரட்டை கோபுர குடியிருப்பு கட்டடங்களை இம்மாதம் 28ல் தரைமட்ட மாக்க உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, நொய்டாவில் உள்ள 'சூப்பர்டெக்' என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம், 'எமரால்டு கோர்ட்' என்ற 40 மாடிகளை உடைய இரட்டை கோபுர
 நொய்டா இரட்டை கோபுரங்கள் ஆக., 28ல் இடிக்க கோர்ட் கெடு

புதுடில்லி :உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட 40 மாடிகளை உடைய இரட்டை கோபுர குடியிருப்பு கட்டடங்களை இம்மாதம் 28ல் தரைமட்ட மாக்க உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

இங்கு, நொய்டாவில் உள்ள 'சூப்பர்டெக்' என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம், 'எமரால்டு கோர்ட்' என்ற 40 மாடிகளை உடைய இரட்டை கோபுர அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டியது. இந்த கட்டடம் விதிகளுக்கு புறப்பாக கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.


latest tamil news




இது தொடர்பான வழக்கில், இரட்டை கோபுரங்களை இடித்து தரைமட்டமாக்க கடந்த ஆண்டு ஆக., மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
கட்டடங்களை வெடி வைத்து நொடியில் தரைமட்டமாக்கும் பணி, 'எடிபைஸ் இன்ஜினியரிங்' என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

கடந்த மே மாதம் கட்டடங்கள் இடிக்கப்படுவதாக இருந்த நிலையில், சில தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக மூன்று மாதம் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து ஆக., 28 வரை
நீதிமன்றம் அவகாசம் அளித்தது.இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், போபண்ணா அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு நேற்று
விசாரணைக்கு வந்தது.அப்போது, வரும் 28ல் இரட்டை கோபுரங்களை இடிக்க நீதிபதிகள் கெடு விதித்தனர். 'எதிர்பாராத வானிலை மற்றும் தொழிநுட்ப கோளாறுகள் ஏற்பட் டால், அதிகபட்சமாக செப்., 4க்குள் கட்டடங்களை இடித்து தரைமட்டமாக்க வேண்டும்' எனவும், நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-ஆக-202206:29:30 IST Report Abuse
அப்புசாமி ஆகஸ்டு 28 , 2050 ல் கூட இடிக்கப்படாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X