சென்னை:நாட்டில் கடலில் காற்றாலை மின் நிலையம் அமைக்க சாதகமான சூழல் தமிழகம், குஜராத்தில் மட்டும் நிலவுகிறது.
இம்மாநிலங்களில் கடலில் 30 ஆயிரம் மெகா வாட் திறனில் காற்றாலை மின் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.முதல் கட்டமாக மத்திய புதுப்பிக்கத்தக்க மின் துறை ராமநாதபுரம், துாத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கடல் பகுதியில் ஒப்பந்த நிறுவனம் வாயிலாக 500 மெகா வாட் திறனில் காற்றாலை மின் நிலையம் அமைக்க உள்ளது.
ஒப்பந்த நிறுவனத்திடம் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை தமிழக மின் வாரியம் 3.50 ரூபாய்க்கு வாங்கும். அதற்கு மேல் உள்ள தொகையை மத்திய அரசு வழங்கும். டில்லியில் நேற்று இது குறித்து மத்திய மின் துறை ஆலோசனை கூட்டம் நடத்தியது. அதில் தமிழக மின் வாரிய உயரதிகாரிகள் பங்கேற்றனர்.