ராய்ப்பூர்:சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த சண்டையில் நக்சலைட் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நக்சலைட்டுகள் சிலர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர். அப்போது நக்சலைட்டுகள், சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர்.
இதில் நக்சலைட் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் மீது, 17க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் உள்ளன. இவரது தலைக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்ததாக பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.