சேலம்:தர்மபுரியைச் சேர்ந்தவர் ஆசிக், 22; சேலம், கோட்டையில் தங்கி, வெள்ளி பட்டறையில் பணியாற்றி வந்தார். இவரை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்து, அவரிடமிருந்த மொபைல் போன், பென் டிரைவ், பாகிஸ்தான் கொடியை பறிமுதல் செய்து, டவுன் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
போலீசார், அவரை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். நேற்று டவுன் போலீசார், ஆசிக்கை காவலில் எடுத்து விசாரித்தனர்.அப்போது, பெங்களூரு, கோவை, சென்னையில் இருந்து வந்து, அவரை சந்தித்தவர்கள் யார், எதற்காகசந்தித்தனர், எந்த வகை சதி திட்டத்தில் ஈடுபட திட்டமிட்டனர் என்ற கோணங்களில் போலீசார் விசாரித்தனர்.