பிரதமரின் சுதந்திர தின விழா உரையில் நடுத்தர மக்களுக்கு வருகிறது நல்ல சேதி

Added : ஆக 13, 2022 | கருத்துகள் (27) | |
Advertisement
நாட்டின் 76வது சுதந்திர தினத்தன்று டில்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றப்போகும் உரை, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது. நடுத்தர வர்க்கத்தினருக்கான நிவாரண தொகுப்பு வழங்குவது குறித்து பிரதமர் உறுதி அளிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும், வரும் 2024 லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வின் வெற்றியை உறுதி செய்யும் விதமாக மூன்று அம்ச
பிரதமர் சுதந்திர தின விழா உரை , நடுத்தர மக்கள் நல்ல சேதி

நாட்டின் 76வது சுதந்திர தினத்தன்று டில்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றப்போகும் உரை, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது.

நடுத்தர வர்க்கத்தினருக்கான நிவாரண தொகுப்பு வழங்குவது குறித்து பிரதமர் உறுதி அளிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும், வரும் 2024 லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வின் வெற்றியை உறுதி செய்யும் விதமாக மூன்று அம்ச திட்டங்கள் பற்றியும் மோடி தெரிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


latest tamil news



சுதந்திர தினத்தன்று டில்லி செங்கோட்டையில் பிரதமர் உரை நிகழ்த்துவது வழக்கம். இந்த ஆண்டு, 75வது சுதந்திர தினத்தை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், நாளை மறுதினம் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றப்போகும் 65 நிமிட உரை, பல முக்கிய அம்சங்கள் நிறைந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது.


வாரண தொகுப்பு



இதற்கான ஒத்திகை, டில்லி செங்கோட்டையில் நேற்று நடந்தது. இதில், பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த உரை உணர்வுப்பூர்வமானதாக இருக்கும் என்றும், நடுத்தர வர்க்கத்தினர் சந்திக்கும் பிரச்னைகள், அவர்களுக்கான நிவாரண தொகுப்பு வழங்குவது குறித்து உறுதி அளிப்பது, சீனாவால் நாடு எதிர்கொண்டு வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஆகியவற்றை முன்னிறுத்தி இருக்கும் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

அது மட்டுமின்றி, 2024 லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வின் வெற்றியை உறுதி செய்யும் விதமாக, மூன்று அம்ச திட்டம் பற்றி தெரிவிக்க பிரதமர் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. அதில், முதலாவது திட்டம் பற்றித்தான், சுதந்திர தின விழாவின் செங்கோட்டை உரை அமையும் என்றும் கூறப்படுகிறது.இதற்கு அடுத்தபடியாக, 2022, நவ., 23ல் புதிய பார்லிமென்ட் கட்டடத்தில் நடக்கவுள்ள குளிர்கால கூட்டத்தொடரில் பிரதமர் மோடி ஆற்றப்போகும் முதல் உரையும், 2023 பிப்., 1ல் மத்திய பட்ஜெட்டின் போது பிரதமரின் உரையும், பா.ஜ.,வை மீண்டும் ஆட்சியில் அமர்த்த தேவையான அனைத்து அம்சங்களுடன் இருக்கும் என, பிரதமர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, துணை ஜனாதிபதியாக ஜக்தீப் தன்கர் நேற்று முன்தினம் பதவி ஏற்ற பின், அந்த விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மூத்த ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் தனியாக சந்தித்து, மூன்று மணி நேரம் ஆலோசனை கூட்டம் நடத்தியதாக டில்லி வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.


அரசியல் நிகழ்வுகள்



அப்போது, சமீபத்திய அரசியல் நிகழ்வுகள் குறித்து அவர்கள் மதிப்பீடு செய்ததாக கூறப்படுகிறது. மேலும், அடுத்த ஆண்டு தாக்கல் செய்யவுள்ள மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. அதில், பல்வேறு புதிய திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் குறித்த அறிவிப்புகளுக்கு திட்டமிட்டுஉள்ளதாகவும் கூறப்படுகிறது.ஏழை எளிய மக்கள் நேரடியாக பயன் பெறும் திட்டங்களை அதிகரிக்கவும்ஒ முன் எப்போதும் இல்லாத அளவுக்கு புதிய வேகத்துடன் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்ட
தாக தகவல் வெளியாகி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
13-ஆக-202217:13:35 IST Report Abuse
venugopal s …..
Rate this:
Cancel
13-ஆக-202213:53:34 IST Report Abuse
அப்புசாமி ,,,,
Rate this:
Cancel
13-ஆக-202210:53:50 IST Report Abuse
அப்புசாமி அச்சே தின் ஆனே வாலே ஹைன்னு 2014 ல சுட்ட வடை இன்னும் நெஞ்சைக் கரிக்குது. அப்புறமா சுட்ட சமூசா, போண்டா, சப்பாத்தி எல்லாம் அப்பிடியே இருக்கு.
Rate this:
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X