ஹோட்டலை விட்டு வர வேண்டாம்: கோத்தபயவுக்கு போலீஸ் அறிவுரை

Updated : ஆக 13, 2022 | Added : ஆக 13, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
பாங்காக் :'ஹோட்டலில் தங்கிஉள்ள இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து வெளியே வர வேண்டாம்' என தாய்லாந்து போலீஸ் அறிவுறுத்தியுள்ளது.நம் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உச்சத்துக்கு சென்றதால் வெகுண்டு எழுந்த மக்கள், அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர்.
ஹோட்டல் , வர வேண்டாம்: கோத்தபய , போலீஸ் அறிவுரை

பாங்காக் :'ஹோட்டலில் தங்கிஉள்ள இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து வெளியே வர வேண்டாம்' என தாய்லாந்து போலீஸ் அறிவுறுத்தியுள்ளது.


நம் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உச்சத்துக்கு சென்றதால் வெகுண்டு எழுந்த மக்கள், அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர்.


latest tamil news



இதை முன்கூட்டியே அறிந்த அதிபர் கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து தப்பி மாலத்தீவுக்கு சென்றார். பின், அங்கிருந்து சிங்கப்பூர் சென்றடைந்தார். அங்கு 'விசா' காலம் முடிந்ததால், அவர் தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்துக்கு சென்றுள்ளார். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியுள்ள கோத்தபயவுக்கு, அந்நாட்டு போலீஸ் பாதுகாப்பு அளித்து வருகிறது.கோத்தபய எந்த ஹோட்டலில் தங்கியுள்ளார் என்ற தகவலை அந்நாட்டு அரசு வெளியிடவில்லை.ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக ஹோட்டலை விட்டு வெளியே வர வேண்டாம் என அவருக்கு தாய்லாந்து போலீஸ் அறிவுறுத்தியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-ஆக-202209:20:21 IST Report Abuse
ராமகிருஷ்ணன் கோத்த பயலுக்கு இந்த நிலையா. இதையெல்லாம் பார்த்தும் இந்தியாவில் குடும்ப ஊழல் ஆட்சி செய்யும் கட்சிகளுக்கு புத்தி வரவில்லை என்றால் மக்கள் தண்டிப்பார்கள்.
Rate this:
Cancel
13-ஆக-202209:15:44 IST Report Abuse
அப்புசாமி ஹோட்டல் சிறை...
Rate this:
Cancel
தமிழன் - கோவை,இந்தியா
13-ஆக-202209:00:08 IST Report Abuse
தமிழன் இந்த தியாகியை ஈழத் தமிழர்கள் மற்றும் பிரபாகரனின் ஆவி துறத்த ஆரம்பித்து விட்டது...இவன் எந்த நாட்டுக்கு சென்றாலும் துறத்திக் கொண்டே இருக்கும்....எங்கும் ஒளிந்து தப்ப முடியாது. உப்பை தின்றுவிட்டு நீர் குடிக்காமல் இருக்க முடியுமா????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X