வரும் 2023 ஆகஸ்டுக்குள் 75 'வந்தே பாரத்' ரயில்கள்; அஸ்வினி வைஷ்ணவ் உறுதி

Updated : ஆக 13, 2022 | Added : ஆக 13, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை : ''வரும் 2023 ஆகஸ்ட் மாதத்திற்குள், 75 வந்தே பாரத் ரயில்களை, நாடு முழுதும் இயக்க, ரயில்வே துறை நடவடிக்கை எடுத்து வருகிறது,'' என, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.சென்னை, பெரம்பூர் ஐ.சி.எப்., தொழிற்சாலையில் முதன்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் 97 கோடி ரூபாயில் 'ரயில் 18' அதிநவீன விரைவு ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. மணிக்கு 180 கி.மீ.,
2023 ஆகஸ்ட், 75 'வந்தே பாரத்' ரயில்கள், அஸ்வினி வைஷ்ணவ்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


சென்னை : ''வரும் 2023 ஆகஸ்ட் மாதத்திற்குள், 75 வந்தே பாரத் ரயில்களை, நாடு முழுதும் இயக்க, ரயில்வே துறை நடவடிக்கை எடுத்து வருகிறது,'' என, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

சென்னை, பெரம்பூர் ஐ.சி.எப்., தொழிற்சாலையில் முதன்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் 97 கோடி ரூபாயில் 'ரயில் 18' அதிநவீன விரைவு ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. மணிக்கு 180 கி.மீ., வேகத்தில் செல்லும் இந்த அதிவேக ரயிலுக்கு, 'வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்' என்று பெயரிடப்பட்டு உள்ளது. புதுடில்லி - வாரணாசி, புதுடில்லி - வைஷ்ணோ தேவி இடையே இயக்கப்பட்டு வருகின்றன.


latest tamil newsஇந்த ரயிலில் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, சென்னை ஐ.சி.எப்.,பில் நடந்து வந்த தயாரிப்பு பணிகள் முடிந்து, சோதனை ஓட்டத்திற்கு தயாராக உள்ளது.இந்நிலையில், இந்த ரயிலில் இறுதிக்கட்ட ஆய்வு மேற்கொள்ள, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று, ஐ.சி.எப்., வந்தார். அங்குள்ள பணியாளர்களிடம், 'வணக்கம், எப்படி இருக்கிறீர்கள்?' என தமிழில் நலம் விசாரித்தார். பின், சோதனை ஓட்டத்திற்கு தயாராகவுள்ள புதிய வந்தே பாரத் ரயிலில் ஏறி பார்வையிட்டார்.


latest tamil newsபுதிய வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து, அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.பின், அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பேட்டி: புதிய மாற்றங்களோடு தயாராகியுள்ள வந்தே பாரத் ரயில், சோதனை ஓட்டத்திற்கு செல்ல உள்ளது. இந்த ரயிலை, ௧5 ஆயிரம் கிலோ மீட்டர் துாரத்திற்கு சோதனை ஓட்டம் நடத்த உள்ளோம். பல்வேறு கட்டமாக, இரண்டு மாதங்களுக்கு சோதனை மேற்கொள்ளப்படும். அதன்பின், புது வந்தே பாரத் ரயில், பயணியர் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இந்த ரயில் சர்வதேச தரத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இதற்காக பணியாற்றியுள்ள அனைவருக்கும் நன்றி.இந்த ரயிலில், சொகுசான பயணம் மேற்கொள்ள வசதியாக, ஒவ்வொரு பெட்டியிலும் 'ஏர் ஸ்பிரிங்' பொருத்தப்பட்டுள்ளது. அத்துடன் தானியங்கி கதவுகள், மாற்றுத் திறனாளிகளுக்கான நவீன ரக கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.நாட்டின் 75வது சுதந்திரதினம் கொண்டாடும் தருணத்தில், வரும் 2023 ஆகஸ்டுக்குள், 75 வந்தே பாரத் ரயில்களை நாடு முழுதும் இயக்க, ரயில்வே துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

அனைத்து ரயில்வே மண்டலங்களில் உள்ள 'யார்டு'களிலும், இந்த வகை ரயில்களுக்கான இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள, உரிய தொழில்நுட்பம் மற்றும் கட்டமைப்புகள் மேம்படுத்தபட்டு வருகின்றன.அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள், மேலும் 400 வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது, ஐ.சி.எப்., பொது மேலாளர் ஏ.கே.அகர்வால், தலைமை மெக்கானிக்கல் பொறியாளர் சீனிவாசன், தெற்கு ரயில்வே பொது மேலாளர் பி.ஜி.மால்யா, சென்னை கோட்ட மேலாளர் கணேஷ் மற்றும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உடனிருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
13-ஆக-202218:18:51 IST Report Abuse
venugopal s இதைத் தயாரிப்பது மட்டுமே நம் வேலை, ஆனால் எல்லா ரயில்களும் வட இந்தியாவில் மட்டுமே ஓடும்.
Rate this:
Cancel
Appan - London,யுனைடெட் கிங்டம்
13-ஆக-202208:55:20 IST Report Abuse
Appan சுதந்திரம் வாங்கி 75 ஆண்டுகள் ஆகியும் இந்தியன் ரயில்வே மாட்டு வண்டி டெக்னாலஜியை உபயோக படுத்துகிறது..இந்த வந்தே மாதிரம் ரயில்வே ஜேர்மன் டெக்னாலிஜியை உபயோக படுத்துகிறது,,10 லட்சத்திற்கு மேல் பணியாளர்கள் உள்ள ரயில்வே இது நாள் வரை எந்த பெரிய டெக்னாலஜியையும் கண்டுபிடிக்கவில்லை..ரயில்வேயில் அப்படி புதிய டெச்னிலோகியை கண்டுபிடித்தவரை போற்றி கவுரவ் படுத்தாமல் துன்பறுத்துவார்கள் இது தான் இந்தியன் ரயில்வே,, ரயில்வேயின் R & D , லக்னோவில் உள்ளது..அதற்க்கு ரயில்வேயில் வேலை செய்ய முடியாதர்களை போடுவார்கள். இப்படி செய்தால் எப்படி ரயில்வேயில் புதியவர்கள் வரும்? .அதோடு இந்த R & D லக்னோ, உ.பி யில் உள்ளது..அங்கு எப்படி R & D செய்ய முடியும்..இப்படி ரயில்வேயில் எல்லாம் முறை . அற்று நடக்கிறது சுதந்திரத்திற்கு பின் உருவாக்கிய ISRO உலகில் ஒரு முன்னணி நிறுவனமாக உள்ளது..ரயில்வேயில் பெரும் அளவில் மாற்றங்கள் வர வேண்டும்..அப்போதான் ரயில்வே சரியாக நடக்கும்..
Rate this:
Cancel
13-ஆக-202206:25:53 IST Report Abuse
அப்புசாமி 15 லட்சம் உறுதி. ரெண்டு கோடி வேலை உறுதி. எல்லாருக்கும் வூடு உறுதி. 75 ரயில்கள் உறுதி. எதுவும் உறுதியில்லை. ஜி.எஸ்.டி வரி உயர்த்தல் மட்டுமே உறுதி.
Rate this:
ஸ்டிக்கன் 2 - al-rayan,பஹ்ரைன்
13-ஆக-202207:39:15 IST Report Abuse
ஸ்டிக்கன்  2எல்லாம் இலவசம் வாங்கிகிட்டு பிள்ளைகளை பெற்று போட்டு செல்லும் திராவிட மாடல்களில் எதற்கு சார் வேலைவாய்ப்பு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X