கருணை பணியில் சேர லஞ்சம் கேட்கும் அதிகாரி

Updated : ஆக 13, 2022 | Added : ஆக 13, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
விருதுநகர் : விருதுநகரில் கருணை அடிப்படையில் பணி வழங்குவதற்கு அதிகாரி ஒருவர் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்கும் ஆடியோ வெளியானது.விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றிவர் வேலம்மாள். இவர் பணியின் போது இறந்தார். இவரது மகள் சீனியம்மாள் கருணை அடிப்படையில் பணி வழங்க மனு செய்திருந்தார். சீனியம்மாளுக்கு வேலை வழங்குவது தொடர்பாக கலெக்டர் அலுவலக அதிகாரி
கருணை பணி, லஞ்சம், அதிகாரி,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone



விருதுநகர் : விருதுநகரில் கருணை அடிப்படையில் பணி வழங்குவதற்கு அதிகாரி ஒருவர் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்கும் ஆடியோ வெளியானது.விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றிவர் வேலம்மாள். இவர் பணியின் போது இறந்தார்.

இவரது மகள் சீனியம்மாள் கருணை அடிப்படையில் பணி வழங்க மனு செய்திருந்தார். சீனியம்மாளுக்கு வேலை வழங்குவது தொடர்பாக கலெக்டர் அலுவலக அதிகாரி ஒருவர் லஞ்சம் கேட்பது போன்ற ஆடியோ வெளியாகியுள்ளது. அதில் சீனியம்மாளின் சகோதரரிடம் பேசுகையில், "ரகசியம் காப்பாற்ற வேண்டும். மேட்டரை வெளிவிட கூடாது. ஆவணங்களை கஷ்டப்பட்டு திரட்டி உள்ளேன்.


latest tamil news



பணம் இவ்வளவா, என்றால் வேலை இருக்கிறதே. இது நிரந்தர பணியிடம் தானே. இதற்கு ரூ.5 லட்சம் கொடுத்தாலும் கிடைக்காது. நாளைக்கு ஒரு ரூ.15 ஆயிரம் கொண்டு வந்து விடுங்கள். யாரிடமும் கூற வேண்டாம்," இவ்வாறு பேசி உள்ளார்.

இப்பணிக்கு பணி ஆணை வழங்கும் அதிகாரியாக இருப்பவர் கலெக்டரின் சத்துணவு நேர்முக உதவியாளர் செல்வராஜ். இது தொடர்பாக அவரிடம் கேட்ட போது, "இது நான் இல்லை. நான் என சிலர் தவறாக பரப்பி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசில் புகார் அளிக்க உள்ளேன்," என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Devanand Louis - Bangalore,இந்தியா
13-ஆக-202210:01:54 IST Report Abuse
Devanand Louis மதுரை திருமங்கலத்தில் நகராட்சியின் பத்து கோடி கடனுள்ளதால் இப்பொழுது சொத்துவரியை நூறு % உயர்த்தியுளார்கள், இந்த மாதிரியான வரிவசூல்கள் கடுமையாக அங்குள்ள மக்கள் வெறுக்கிறார்கள் நகராட்சியின் சர்வாதிகாரப் போக்கை கண்டு, மேலும் மதுரை திருமங்கலம் நகராட்சியின் லஞ்சம் வாங்கும் கொடுமையான தொழில், நிர்வாக சீர்கேடு, தமிழ் நாடு அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்படாமலிருத்தல், அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் -மதுரை திருமங்கலம் நகராட்சியில் உள்ள அணைத்து ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் எல்லோரும் லஞ்சம் வாங்குவதுதான் அவர்களின் தலையாய வேலை, லஞ்சம் கொடுக்காமல் எந்த ஒரு சின்ன வேலை அங்கு நடக்காது, பலவித தில்லுமுல்லு வேலைகளையும் செய்து எல்லா அலுவல் பணிகளுக்கும் லஞ்சம் கேட்கிறார்கள் மேலும் தமிழ் நாடு அரசுக்கு வரும் வருவாயை வரவிடாமல் கெடுக்கிறார்கள் .கொரோனாவால் நாடே பாதிப்படைந்துள்ளது ,மக்கள் கொரானாவால் மனநலம் மற்றும் வருவாய் இல்லாத இந்த நேரத்தில் திருமங்கலம் நகராட்சியின் மனித நேயமில்லாத லஞ்சம் வாங்கும் சர்வாதிகாரம் கொண்ட டவுன் பிளானிங் அதிகாரிகள், பொதுமக்கள் எல்லோரும் நகராட்சியின் இந்த கேடுகெட்ட வேலைகளால் மிகவும் கொதிப்படைந்துள்ளார்கள் ஆகையால் விஜிலென்ஸ் ரைடு தேவை திருமங்கலம் நகராட்சிக்கு
Rate this:
Cancel
Devanand Louis - Bangalore,இந்தியா
13-ஆக-202210:01:15 IST Report Abuse
Devanand Louis தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தீடிரென்று பல அலுவலகங்களுக்கு பார்வையிடுகிறார் ஆய்வு செய்கிறார், அதேபோல் மதுரை திருமங்கலம் மின்சாரவாரியத்தின் அலுவலர்களையும் பார்வையிட வேண்டுமென்பது அந்த ஏரியா மக்களின் கோரிக்கைகள். மதுரை திருமங்கலம் மின் வாரியத்திலுள்ள அனைத்து பொறியாளர்களின் லஞ்சம் வாங்கும் கொள்ளைக்கூடாரம் - அங்குள்ள பொறியாளர்கள் எல்லோரும் லஞ்சப்பணத்தை பகிர்ந்துகொள்கிறார்கள் ,மக்கள் மிகவும் முகம் சுளிக்குமளவிற்கு லஞ்சம் வாங்கும் கூடாரமாகவே திகழ்கிறது மதுரை திருமங்கலம் மின்வாரிய க்ஹோடத்திற்கு
Rate this:
Cancel
Muraleedharan.M - Chennai,இந்தியா
13-ஆக-202208:31:44 IST Report Abuse
Muraleedharan.M தேள் கொட்டினால் திருடன் சத்தம் போடுவானா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X