வழி தவறி வந்த குட்டி யானை; தாயிடம் சேர்த்த மக்கள்

Added : ஆக 13, 2022 | |
Advertisement
பாலக்காடு : கேரள மாநிலம் நிலம்பூர் பகுதியில், வழி தவறி ஊருக்குள் வந்த குட்டி யானையை, ஊர் மக்கள் உதவியுடன், தாய் யானையிடம் வனத்துறையினர் சேர்ந்தனர்.கேரள மலப்புரம் மாவட்டம், நிலம்பூர் கருளாயி குடியிருப்பு பகுதிக்குள், 11ல் வனத்திலிருந்து குட்டி யானை வழி தவறி வந்துள்ளது.அதனை ஊர்மக்கள் பாதுகாத்து வைத்திருந்தனர். தகவல் அறிந்த கருளாயி வனச் சரக அலுவலர் நஜ்மல் அமீன்
குட்டி யானை,  கருளாயி வனத்துறை, கருளாயி பொது மக்கள்,  கேரளா, Baby Elephant, Karulai Forest , Karulai makkal, Kerala,


பாலக்காடு : கேரள மாநிலம் நிலம்பூர் பகுதியில், வழி தவறி ஊருக்குள் வந்த குட்டி யானையை, ஊர் மக்கள் உதவியுடன், தாய் யானையிடம் வனத்துறையினர் சேர்ந்தனர்.கேரள மலப்புரம் மாவட்டம், நிலம்பூர் கருளாயி குடியிருப்பு பகுதிக்குள், 11ல் வனத்திலிருந்து குட்டி யானை வழி தவறி வந்துள்ளது.அதனை ஊர்மக்கள் பாதுகாத்து வைத்திருந்தனர்.

தகவல் அறிந்த கருளாயி வனச் சரக அலுவலர் நஜ்மல் அமீன் உத்தரவின்படி, நெடுங்கயம் வன துறையினர் வந்து குட்டி யானை மீட்டு, வனத்தில் விடுத்த போது, மீண்டும் வன அலுவலகத்துக்கு குட்டி யானை வந்தது.பின்னர், அதனை அலுவலக வளாகத்திற்கு கொண்டு சென்ற வனத்துறையினர், உணவளித்து பராமரித்து வந்தனர்.

தொடர்ந்து, வனத்துறையினர் இரு பகுதிகளாக பிரிந்து நடத்தய ஆய்வில், கருளாயி பகுதியில் அருகே உள்ள வன எல்லையில் காட்டுயானை கூட்டம் முகாமிட்டிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, ஊர் மக்கள் உதவியுடன், அந்த கூட்டத்தில் இருந்த தாய் யானையுடன், குட்டி யானையை, நீண்ட நேரம் முயற்சிக்கு பின் சேர்த்தனர். இதனால், கருளாயி பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X