வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?

Updated : ஆக 13, 2022 | Added : ஆக 13, 2022 | கருத்துகள் (13+ 32) | |
Advertisement
புதுடில்லி: 'ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி செலுத்த பதிவு பெற்றவர்கள் இனி தங்கள் வீட்டு வாடகையுடன் மாதம்தோறும், 18 சதவீத ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், சில்லரை வர்த்தகம் செய்யும் கடைகளை வாடகைக்கு எடுக்கும் தனி நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி
வீட்டு வாடகை, ஜிஎஸ்டி, சாமானிய மக்கள், மத்திய அரசு, House Rent, GST, Central Govt,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


புதுடில்லி: 'ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி செலுத்த பதிவு பெற்றவர்கள் இனி தங்கள் வீட்டு வாடகையுடன் மாதம்தோறும், 18 சதவீத ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், சில்லரை வர்த்தகம் செய்யும் கடைகளை வாடகைக்கு எடுக்கும் தனி நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்பட்டு வந்தது.

தனிப்பட்ட பயன்பாட்டுக்காக வீடு வாடகை அல்லது ஒத்திக்கு எடுப்பதற்கு ஜி.எஸ்.டி., விதிக்கப்படாமல் இருந்தது. சமீபத்தில் நடந்து முடிந்த 47வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தின் போது, இந்த விதியில் மாற்றம் செய்யப்பட்டுஉள்ளது. அதாவது, தாங்கள் செய்யும் தொழில் அல்லது சேவைகளுக்கு ஜி.எஸ்.டி., வரி செலுத்தும் தனிப்பட்ட நபர்கள் அல்லது நிறுவனங்கள், வீடுகளை வாடகைக்கோ அல்லது குத்தகைக்கோ எடுத்திருந்தால், இனி மாத வாடகையுடன் சேர்த்து 18 சதவீதம் ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும்.


latest tamil news




ஜி.எஸ்.டி., பதிவு பெற்றவர்களுக்கு மட்டுமே இந்த விதி பொருந்தும். இதர பொதுமக்கள் செலுத்தும் மாத வாடகைக்கு ஜி.எஸ்.டி., கிடையாது. 'இதன் வாயிலாக, பெரு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்காக வீடு அல்லது விருந்தினர் இல்லங்களை வாடகைக்கு எடுத்திருந்தால், அவர்கள் ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டிய நிலை இனி ஏற்பட்டுள்ளது. 'இது சாமானிய மக்களை பாதிக்காது' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (13+ 32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-ஆக-202219:10:16 IST Report Abuse
அப்புசாமி எனக்கு ஒரு வீடு இருக்கு. ஒரு வணிக நிறுவனத்துக்கு வாடகைக்கு உட்டிருக்கேன். என்பது 18 சதவீதம் ஜி.எஸ்.டி கட்டணுமா? கவலையே இல்கை. அந்த வணிக நிறுவனத்திடமே வாடகை ஜி.எஸ்.டி ந்னு சேத்து பில் போட்டுருவேன். அந்த வணிக நிறுவனம் தனது விலையை ஏற்றி வாடிக்கையாளர் தலையில் கட்டிரும். விலைவாசி உயரும். மக்கள் தேர்தலில் வெப்பாங்க ஆப்பு. நடத்துங்க...
Rate this:
Cancel
13-ஆக-202212:45:08 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren 0 .....
Rate this:
Cancel
Sandru - Chennai,இந்தியா
13-ஆக-202210:01:04 IST Report Abuse
Sandru ,,,,,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X