இது உங்கள் இடம்: கஞ்சி தொட்டி திறக்கும் அவலம் உருவாகும்!

Updated : ஆக 13, 2022 | Added : ஆக 13, 2022 | கருத்துகள் (33) | |
Advertisement
உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சியில், சமீபத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'நீதித் துறையின் கோரிக்கைகளை, தி.மு.க., அரசு உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறது' என்று தெரிவித்துள்ளார். அப்படியெனில்,
கஞ்சி தொட்டி, ஸ்டாலின், வக்கீல், கீழமை நீதிமன்றங்கள், காலி பணியிடம்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone



உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்

அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சியில், சமீபத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'நீதித் துறையின் கோரிக்கைகளை, தி.மு.க., அரசு உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறது' என்று தெரிவித்துள்ளார். அப்படியெனில், கீழமை நீதிமன்றங்களில், 275 நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பது ஏன்... இந்த பணியிடங்களை நிரப்பும்படி, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் இருந்து பரிந்துரை எதுவும் வரவில்லையா?

'தனிமனித உரிமைகள், எந்தக் காலத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் பாதிக்கப்படக் கூடாது. அதைக் காக்கும் பொறுப்பும், கடமையும், தமிழக அரசுக்கு உண்டு' என்று சொல்லும் முதல்வர், 275 கீழமை நீதிமன்றங்களிலும், வழக்குகளை நடத்தி வரும் பல ஆயிரம் வழக்காடிகளுக்கு சொல்லும் பதில் என்ன?


latest tamil news



மக்களுக்கு இன்றைய தேவை, நீதி மட்டுமே என்று பேசும் முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக, காலியிடங்களை நிரப்புவதற்கான நீதிபதிகளை எப்போது தேர்வு செய்யப் போகிறார்? அப்படி தேர்வு செய்யப்படும் நீதிபதிகள், போதிய பயிற்சி பெற்று என்றைக்கு பணி அமர்த்தப்படுவர். இதற்கெல்லாம் பதில் சொல்லுங்கள் முதல்வரே...அதுவரை, தற்போது நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ள நீதிமன்றங்களை மட்டுமே நம்பியுள்ள வழக்கறிஞர்கள், அவர்களின் உதவியாளர்கள் மற்றும் வழக்காடிகளுக்கு தீர்வு என்ன, சொல்லுங்கள் ஸ்டாலின்...

காலம் தாழ்ந்து கிடைக்கும் நீதி, மறுக்கப்பட்ட நீதி என்ற வகையில், வழக்காடிகள் மனம் வெறுத்து போய் உள்ளனர். ஜூனியர் வழக்கறிஞர்கள் பல ஆயிரம் பேர் பாதை தவறாமல் இருக்கவும், வழக்காடிகள் நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை இழக்காமல் இருக்கவும், கீழமை நீதிமன்றங்களில் நிரப்பப்படாமல் உள்ள நீதிபதி பணியிடங்களை உடனே, போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும்.

அதுவரை இந்த நீதிமன்றங்களில், வாரத்தில் இரண்டு நாட்களாவது பொறுப்பு நீதிபதிகள் அமர்ந்து பணிபுரிய, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதியரசர் உத்தரவிட வேண்டும். இல்லையெனில், வக்கீல்களின் வயிற்றுப் பசி போக்க, பல நீதிமன்றங்களின் முன் கஞ்சித் தொட்டி திறக்க வேண்டிய அவல நிலைமை உருவாகி விடும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
13-ஆக-202219:09:11 IST Report Abuse
VENKATASUBRAMANIAN என்ன ஆகும் நீதிபதிகள் இல்லை வழக்கு போட்டால் மட்டும் போதுமா. அதை வைத்து பல வருடங்கள் ஆகும். அதுவரை ஜாமீனில் வந்து எல்லாவற்றையும் அனுபவிப்பார்கள். இதுதான் நடக்கும்
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
13-ஆக-202215:26:02 IST Report Abuse
sankar இ ந்தியாவுக்கு ஏகப்பட்ட கடன் ,வட்டி செலுத்த வேண்டிய கடமை இருக்காமே. அப்ப நீயும் நானும் கூட கஞ்சிக்கு கியூல நிக்கணும்.
Rate this:
Ramd - ,
13-ஆக-202219:32:41 IST Report Abuse
Ramd.......
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
13-ஆக-202215:06:47 IST Report Abuse
அசோக்ராஜ் பணம் செலவழித்து நீதி தேடி வருபவன் பெயர் வழக்காடியாம். வாய்தா வாங்கி பிழைப்பு ஓட்டுபவன் பெயர் வழக்கு "அறிஞராம்".
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X