திருமண ஊர்வலம் போல் சென்று சோதனை நடத்திய அதிகாரிகள்

Updated : ஆக 13, 2022 | Added : ஆக 13, 2022 | கருத்துகள் (32) | |
Advertisement
மும்பை-மஹாராஷ்டிராவில் திருமண ஊர்வலத்துக்கு செல்வது போல், 120 கார்களில் சென்று வருமான வரித்துறை அதிகாரிகள் பிரபல நகைக்கடை நிறுவனத்தில் அதிரடியாக சோதனை நடத்திய தகவல் வெளியாகி உள்ளது.மஹாராஷ்டிராவின் ஜல்னா மாவட்டத்தில் பிரபல நகைக்கடை நிறுவனம் செயல்படுகிறது. மும்பை, நாசிக், அவுரங்காபாத் போன்ற நகரங்களில் இந்த நிறுவனத்தின் கிளைகள் செயல்படுகின்றன. இந்நிறுவனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மும்பை-மஹாராஷ்டிராவில் திருமண ஊர்வலத்துக்கு செல்வது போல், 120 கார்களில் சென்று வருமான வரித்துறை அதிகாரிகள் பிரபல நகைக்கடை நிறுவனத்தில் அதிரடியாக சோதனை நடத்திய தகவல் வெளியாகி உள்ளது.latest tamil newsமஹாராஷ்டிராவின் ஜல்னா மாவட்டத்தில் பிரபல நகைக்கடை நிறுவனம் செயல்படுகிறது. மும்பை, நாசிக், அவுரங்காபாத் போன்ற நகரங்களில் இந்த நிறுவனத்தின் கிளைகள் செயல்படுகின்றன. இந்நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து மிக ரகசியமாக சென்று சோதனை நடத்த அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதற்கான எல்லா ஏற்பாடுகளும் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டன. நேற்று முன்தினம் இதற்காக 120 சொகுசு கார்களை அதிகாரிகள் தயார் நிலையில் வைத்தனர். யாருக்கும் சந்தேகம் வரக் கூடாது என்பதற்காக அந்த கார்கள் அனைத்தும், திருமணத்துக்கு மணமகன், மணமகளை அழைத்துச் செல்லும் கார்கள் போல், மலர்களால் அலங்கரிக்கப் பட்டன. இதன்பின், அந்த கார்கள் திருமண ஊர்வலம் செல்வது போல் சென்றன. அந்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு சொந்தமான 30க்கும் மேற்பட்ட இடங்களுக்குள் அந்த கார்கள் புகுந்தன. அவற்றில் இருந்து இறங்கிய அதிகாரிகள், கடைகள் மற்றும் வீடுகளுக்குள் சென்று அதிரடியாக சோதனையிட்டனர்.


latest tamil newsஇதை சற்றும் எதிர்பார்க்காத ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சோதனையில் கட்டுக்கட்டாக, 70 கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. அவற்றை இயந்திரங்கள் வாயிலாக எண்ணி முடிப்பதற்கே, 13 மணி நேரம் தேவைப்பட்டது.இதுதவிர, கணக்கில் வராத 32 கிலோ தங்கம் மற்றும் 14 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரமும் கைப்பற்றப்பட்டன. இந்த அதிரடிச் சோதனை யில் ஒட்டுமொத்தமாக, 390 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திராவிட தங்கம் - Gopalapuram ,அல்ஜீரியா
13-ஆக-202213:53:13 IST Report Abuse
திராவிட தங்கம் ,,,,
Rate this:
Cancel
sridhar - Dar Es Salaam ,தான்சானியா
13-ஆக-202212:38:46 IST Report Abuse
sridhar அப்போ இன்னும் கொஞ்ச நாட்களில் ஒரு புது படம் வரப்போகுது இதே பாணியில்
Rate this:
Cancel
R S BALA - CHENNAI,இந்தியா
13-ஆக-202211:27:59 IST Report Abuse
R S BALA இது போன்ற ரெய்டுகளால் என்ன பிரயோஜனம் .. இவர்கள் யார் என்ன பெயர் ஊர் ஒரு விவரமும் இல்லாத அறிக்கை .. முழு விவரத்துடன் தண்டனை விவரமும் மக்களுக்கு என்று தெரிவிக்கபடுகிறதோ அப்போதுதான் இது போன்ற ரெய்டுகளில் மக்களுக்கு நம்பிக்கை வரும் இல்லையெனில் இதில் வருமானவரித்துறை அவர்கள் வருமானம் பார்க்க இதனை செய்வதாகத்தான் பொதுமக்களுக்கு தோன்றும்.
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
13-ஆக-202214:27:45 IST Report Abuse
Visu Iyerஇது போன்ற ரெய்டுகளால் என்ன பிரயோஜனம் ../// மத்திய அரசு ஊழியர்களுக்கு, பே கமிஷன் வந்து இருக்கு சம்பளம் உயர்வு கிடைக்கும்.. ///இது பிரயோசனம் இல்லையா...
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
13-ஆக-202214:28:39 IST Report Abuse
Visu Iyerஇவர்கள் யார் என்ன பெயர் ஊர் ஒரு விவரமும் இல்லாத அறிக்கை .. முழு விவரத்துடன் தண்டனை விவரமும் ///சொல்லவில்லை என்றால் அவர் எந்த கட்சியை சேர்ந்தவராக இருக்கும் என்று உங்களுக்கு சொல்லி தானா தெரிய வேண்டும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X