'மெகா' கூட்டணி அமைக்க லாலு மகன் தீவிர முயற்சி

Updated : ஆக 13, 2022 | Added : ஆக 13, 2022 | கருத்துகள் (17) | |
Advertisement
புதுடில்லி-ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவரும், பீஹார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் நேற்று டில்லியில், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை சந்தித்துப் பேசினார். அவர், மத்தியில் ஆளும் பா.ஜ.,வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணியை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.பீஹாரில், 2020ல் நடந்த சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமாரின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி-ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவரும், பீஹார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் நேற்று டில்லியில், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை சந்தித்துப் பேசினார். அவர், மத்தியில் ஆளும் பா.ஜ.,வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணியை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.



latest tamil news



பீஹாரில், 2020ல் நடந்த சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி அமைத்து போட்டியிட்டு ஆட்சியை பிடித்தன.முதல்வரான நிதிஷ்குமார் பா.ஜ.,வுடன் ஏற்பட்ட உரசலால் ராஜினாமா செய்து விட்டு, ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் ஆதரவுடன் கடந்த 10ம் தேதி மீண்டும் ஆட்சி அமைத்துஉள்ளார். புதிய ஆட்சியில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும், லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவ், துணை முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.பதவி ஏற்ற பின் நேற்று முன்தினம் புதுடில்லிக்கு வந்த தேஜஸ்வி யாதவ், தன் சகோதரிகளுடன் ரக்ஷா பந்தன் விழாவை கொண்டாடினார்;

நேற்று காங்., கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். முன்னதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலர் டி.ராஜா ஆகியோரையும் தேஜஸ்வி சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து சமூக வலைதளத்தில் தேஜஸ்வி வெளியிட்ட பதிவில், 'நாட்டின் அரசியல் நிலவரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்தேன்.'ஜனநாயகத்துக்கு வழிகாட்டியாக திகழும் பீஹார் வருங்காலத்தில் நாட்டுக்கே வழிகாட்டும்' என கூறியுள்ளார்.


latest tamil news



இந்நிலையில், 'மத்திய பா.ஜ., ஆட்சிக்கு எதிராக, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து மெகா கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ள தேஜஸ்வியின் முயற்சி பலிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்' என, அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். ஏற்கனவே, ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.,வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை திரட்ட முயன்ற மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி, பாதியிலேயே அதை கைவிட்டு தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
13-ஆக-202216:07:26 IST Report Abuse
Rafi மக்களின் எண்ணங்களுக்கு வடிகாலாக இருக்கும் இவருடைய முயற்சி, பொது கொள்கை விரைவில் உருவாக்க வாய்ப்பிருக்கு. நம்பிக்கையான வேட்பாளர்களுடன் உறுதி செய்து கூட்டணி காண வேண்டும்.
Rate this:
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
13-ஆக-202215:37:12 IST Report Abuse
கல்யாணராமன் சு. \\'ஜனநாயகத்துக்கு வழிகாட்டியாக திகழும் பீஹார் வருங்காலத்தில் நாட்டுக்கே வழிகாட்டும்' \\ .... இப்படித்தான் இங்கே ஒருத்தர் சொல்லிக்கிட்டு (பீஹாருக்கு பதிலா வேற ஒரு பெயரை போட்டு .......) அலைஞ்சிட்டிருக்கார் .... அவருக்கு கோவம் வராதா ??
Rate this:
Cancel
nizamudin - trichy,இந்தியா
13-ஆக-202214:14:41 IST Report Abuse
nizamudin ஊடகங்களுக்கு மத்திய அரசு இன்னும் நிறைய செய்ய வேண்டும் /மத்திய அரசின் வெற்றியில் ஊடகங்கள் (தெற்கு மேற்கு வடக்கு கிழக்கு ) 99 சதவீதம் வெற்றியில் பங்கு வகிக்கின்றனர் ????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X