தனியார் பால் விலை உயர்வு; ஆவினுக்கு திடீர் நெருக்கடி

Updated : ஆக 13, 2022 | Added : ஆக 13, 2022 | கருத்துகள் (13) | |
Advertisement
சென்னை : தனியார் பால் விலை உயர்வு காரணமாக, ஆவின் நிறுவனத்திற்கு திடீர் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.ஆவின் நிறுவனம் வாயிலாக, மாநிலம் முழுதும் உள்ள விவசாயிகளிடம் இருந்து நாள்தோறும், 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது. சமீபத்தில், ஜி.எஸ்.டி.,
தனியார், பால் விலை, உயர்வு, ஆவின், பால் கொள்முதல்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone



சென்னை : தனியார் பால் விலை உயர்வு காரணமாக, ஆவின் நிறுவனத்திற்கு திடீர் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.ஆவின் நிறுவனம் வாயிலாக, மாநிலம் முழுதும் உள்ள விவசாயிகளிடம் இருந்து நாள்தோறும், 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது. சமீபத்தில், ஜி.எஸ்.டி., வரி உயர்வை காரணம் காட்டி, தயிர், நெய், மோர் விலையை 5 மற்றும் 12 சதவீதம் என, ஆவின் நிறுவனம் உயர்த்தியது.

இந்நிலையில், தனியார் நிறுவனங்கள், பால் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் வரை உயர்த்தி உள்ளன. இதனால், ஆவின் நிறுவனத்தை தேடி நுகர்வோர்கள் படையெடுக்க துவங்கியுள்ளனர். ஆனால், ஆவின் தரப்பில் கொள்முதலில் கவனம் செலுத்தாததால், தனியாரிடம் பாலை, விவசாயிகள் விற்று வருகின்றனர். இதனால், வரும் நாட்களில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.


latest tamil news



இதே நிலை நீடித்தால், பால் பவுடர், வெண்ணெய், நெய், தயிர் உள்ளிட்ட பால் பொருட்கள் உற்பத்தியும் பாதிக்கப்படும். எனவே, பால் கொள்முதல் குறைந்த மாவட்டங்களில், அதை அதிகரிக்க, பால் கூட்டுறவு சங்க அதிகாரிகளுக்கு, பால் வளத் துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். உரிய கவனம் செலுத்தாத அதிகாரிகள் மீது சாட்டையை சுழற்றவும், முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krish - chennai,இந்தியா
13-ஆக-202211:48:43 IST Report Abuse
krish ஒரே கல்லில் இருமாங்காய் இதை எதிர்பார்த்துதான் அரசு ஆவின் விற்பனையில் தலையீடு. எல்லாம் தமிழக மக்களின் தலைவிதி. இறைவன்தான் இருதலைக்கொள்ளி எறும்பு போல் அவதிப்படும் தூய எளியோரை காப்பாற்றவேண்டும்.
Rate this:
Cancel
ram - mayiladuthurai,இந்தியா
13-ஆக-202211:31:01 IST Report Abuse
ram அரை லிட்டருக்கு பணம் வாங்கிக்கொண்டு,, கால் லிட்டர் கொடுத்தால் போகுது , மக்கள் சந்தோஷமாக வாங்கி கொள்வார்கள், இவர்களும் விலையை உயர்த்த வேண்டாம்.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
13-ஆக-202211:05:04 IST Report Abuse
raja அதுக்குதான் இந்த விடியாமூஞ்சி விடியல் துக்ளக் இப்போ சர்வாதிகாரியா ஆகப்போறானாம்....ஹி ஹி ஹி....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X