நத்தம் அருகே வினோத எறும்புகள்: வனவிலங்குகளை சாகடிப்பதால் மக்கள் பீதி

Updated : ஆக 13, 2022 | Added : ஆக 13, 2022 | கருத்துகள் (15) | |
Advertisement
நத்தம்--திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கரந்தமலை பகுதியில் பரவியுள்ள வினோத எறும்புகள் வனவிலங்குகளை கொல்வதால் மக்கள் பீதியில் உள்ளனர். மலை அடிவார கிராம மக்கள் வீடுகளை காலி செய்து வேறு ஊர்களுக்கு குடிபெயர்கின்றனர்.கரந்தமலையை சுற்றி உலுப்பகுடி, வேலாயுதம்பட்டி, குட்டுப்பட்டி, ஆத்திப்பட்டி உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்கள் உள்ளன. இப் பகுதியில் சில

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

நத்தம்--திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கரந்தமலை பகுதியில் பரவியுள்ள வினோத எறும்புகள் வனவிலங்குகளை கொல்வதால் மக்கள் பீதியில் உள்ளனர். மலை அடிவார கிராம மக்கள் வீடுகளை காலி செய்து வேறு ஊர்களுக்கு குடிபெயர்கின்றனர்.



latest tamil news



கரந்தமலையை சுற்றி உலுப்பகுடி, வேலாயுதம்பட்டி, குட்டுப்பட்டி, ஆத்திப்பட்டி உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்கள் உள்ளன. இப் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன் புதிய வகை வினோத எறும்புகள் பரவின. நாளடைவில் கரந்தமலை வனப்பகுதி முழுவதும் பரவின. தற்போது சுற்று கிராமப் பகுதிகளிலும் பரவ தொடங்கி உள்ளது. மனிதர்கள் உடலில் வேகமாக ஏறுகிறது. குறிப்பாக இவை கண்களை மட்டுமே பதம்பார்க்கின்றன. உடலில் ஏறுவதால் அலர்ஜி, கொப்பளங்கள் ஏற்படுகின்றன. இந்த எறும்புகளால் வனப்பகுதியில் உள்ள பாம்பு, முயல் போன்ற வனவிலங்குகள் பல இறந்து விட்டதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.

காட்டு மாடு போன்ற பெரிய வன விலங்குகளின் கன்றுகளையும் இந்த எறும்புகள் தாக்கி அழிப்பதாக கூறுகின்றனர். விவசாயிகளின் கால்நடைகளின் கன்றுகளை கொல்கின்றன. எறும்புகள் பரவி உள்ள மயைடிவார விவசாய நிலங்களில் வசிக்கும் விவசாயிகள் வீடுகளை காலி செய்து விட்டு வேறு பகுதிகளுக்கு குடி பெயர்கின்றனர்.கரந்தமலை வனத்துறை வனவர் முத்துச்சாமி கூறுகையில், ''இது புதுவகையான எறும்பாக உள்ளது. இதுபோன்ற வகை எறும்புகளை இதுவரை நாங்களே கண்டதில்லை.''இந்த வகை எறும்புகள் அசுர வேகத்தில் பரவி வருகின்றன. இதனை எப்படி கட்டுப்படுத்துவது என்று எங்களுக்கே தெரியவில்லை. இதனால் வன உயிரினங்கள் அழிகின்றன,'' என்றார்.நத்தம் கால்நடைதுறை டாக்டர் சங்கமுத்து கூறுகையில், ''இப்படி ஒரு எறும்பு இருப்பது தெரியவில்லை. இது தொடர்பாக ஆய்வு செய்யப்படும்,'' என்றார்.கிராமங்களை நோக்கி படையெடுப்பு

கரந்த மலையின் மைய பகுதியில் மட்டும் இருந்த இந்த வினோத எறும்புகள் தற்போது மலை அடிவாரத்தில் உள்ள கிராம பகுதிகளை நோக்கி படையெடுக்கின்றன. அருகில் உள்ள சிறுமலை, அழகர் கோவில்மலை உள்ளிட்ட மலைகளில் இவை இல்லை. கரந்தமலை பகுதியை மட்டுமே முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளன. பீதியில் மலை அடிவாரத்தில் விவசாயம் செய்து வாழும் பல குடும்பங்கள் வீடுகளை காலி செய்து வேறு பகுதிகளுக்கு சென்று விட்டனர்.கே.வெள்ளைச்சாமி, விவசாயி, நத்தம் வேலாயுதம்பட்டிகண்களை தாக்குகின்றன


latest tamil news



வினோத எறும்புகள் ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவைகளின் கண்களை தாக்கி கொல்கின்றன. பல கால்நடைகள் இறந்துள்ளன. வனத்துறை அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் தற்போது வரை எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. இந்த ராட்சத எறும்பு கூட்டம் கால்நடைகளை மட்டுமல்லாது வன விலங்குகளையும் தாக்கி அழிக்கின்றன. எங்கள் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவரின் கண்ணை கடித்து பாதிக்கப்பட்டுள்ளார். பலரின் கை கால்களில் இந்த எறும்புகளால் அலர்ஜி ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர். புதுவகை எறும்புகளிடமிருந்து எங்கள் கிராம மக்களை காக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆ.காமாட்சி, விவசாயி, நத்தம் வேலாயுதம்பட்டி


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dharma - Madurai,இந்தியா
13-ஆக-202217:17:16 IST Report Abuse
Dharma Alfred Hitchcock படம் நினைவுக்கு வருகிறது.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
13-ஆக-202215:07:04 IST Report Abuse
r.sundaram பூச்சி மருந்துகள் இந்த வகை எறும்புகளை கட்டுப்படுத்தாதா என்ன? மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவார்களா என்று ஒரு பழமொழி உண்டு. அதுபோல் இந்த எறும்புகளுக்கு பயந்து வீட்டை காலி பண்ணுவார்களா என்ன?
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
13-ஆக-202211:41:15 IST Report Abuse
raja நடவடிக்கை எடுத்து விட்டு தான் அடுத்த வேலையை பார்ப்பார்கள் போங்கப்பா போயி பொழப்பை பாருங்க....அவனுவோலே புறங்கை நக்கவே நேரம் இல்லைங்கிறானுவோ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X