'தேசியக்கொடி ஏற்றாதவர்கள் மீது இந்த நாடு நம்பிக்கை வைக்காது'

Updated : ஆக 13, 2022 | Added : ஆக 13, 2022 | கருத்துகள் (26) | |
Advertisement
டேராடூன் : ''வீடுகளில் தேசியக் கொடி ஏற்றாதவர்கள் மீது, இந்த நாடும், நாட்டு மக்களும் நம்பிக்கை வைக்க மாட்டார்கள்,'' என, உத்தரகண்ட் பா.ஜ., தலைவர் மகேந்திர பட் கூறிஉள்ளார்.இம்மாநில பா.ஜ., தலைவரான மகேந்திர பட் சமீபத்தில் கூறுகையில், 'நாட்டின் 75வது சுதந்திர தின ஆண்டையொட்டி, வீடுகளில் தேசியக் கொடி ஏற்றாதவர்களின் புகைப்படங்களை எனக்கு அனுப்பி வையுங்கள்' என,
தேசியக்கொடி, இந்தியா, நம்பிக்கை, பா.ஜ., தலைவர், மகேந்திர பட்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


டேராடூன் : ''வீடுகளில் தேசியக் கொடி ஏற்றாதவர்கள் மீது, இந்த நாடும், நாட்டு மக்களும் நம்பிக்கை வைக்க மாட்டார்கள்,'' என, உத்தரகண்ட் பா.ஜ., தலைவர் மகேந்திர பட் கூறிஉள்ளார்.

இம்மாநில பா.ஜ., தலைவரான மகேந்திர பட் சமீபத்தில் கூறுகையில், 'நாட்டின் 75வது சுதந்திர தின ஆண்டையொட்டி, வீடுகளில் தேசியக் கொடி ஏற்றாதவர்களின் புகைப்படங்களை எனக்கு அனுப்பி வையுங்கள்' என, தெரிவித்திருந்தார்.இந்த விவகாரம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மகேந்திர பட்டின் பேச்சுக்கு, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.


latest tamil news




இது குறித்து, மகேந்திர பட் நேற்று கூறியதாவது:வீடுகளில் தேசியக் கொடி ஏற்றாத கட்சி நிர்வாகிகளின் படங்களை அனுப்பி வைக்கும்படி தான் கூறினேன். பொது மக்களைப் பற்றி எதுவும் கூறவில்லை. நாட்டின் 75வது சுதந்திர தினத்தை, அனைத்து தரப்பினரும் கொண்டாடி வருகின்றனர்.

ஆனால், சில அரசியல் கட்சியினர், இந்த விஷயத்தில் பிடிவாதமாக உள்ளனர். சுதந்திர தினத்தை கொண்டாடுவதில், அவர்களுக்கு என்ன பிரச்னை உள்ளது என தெரியவில்லை. வீடுகளில் தேசியக் கொடி ஏற்றாதவர்கள் மீது, இந்த நாடும், நாட்டு மக்களும் நம்பிக்கை வைக்க மாட்டார்கள். இவ்வாறு, அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - சென்னை,இந்தியா
13-ஆக-202217:54:21 IST Report Abuse
sankar இத்தனை வருஷமா நீ கொடி ஏத்தியிருப்பியா?
Rate this:
Cancel
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
13-ஆக-202217:09:52 IST Report Abuse
venugopal s ....
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
13-ஆக-202216:46:39 IST Report Abuse
Vijay D Ratnam இந்த தேசத்துக்கு சுதந்திரம் கொடுக்க கூடாது என்று வெள்ளைக்காரன் காலைப்பிடித்து கதறிய நாதாரி கூட்டம் அப்போதே இருந்தது. அதன் எச்சம் கருங்காலி கும்பலாக இப்பவும் இருக்கிறது. அதுங்க கொடி ஏற்றாது. பெரியாரிஸ்ட், கம்யூனிஸ்ட், டெர்ரரிஸ்ட், நக்ஸ்லைட், மாவோயிஸ்ட், எவாஞ்சலிஸ்ட் அர்பன் நக்ஸல்ஸ், கூலிபான்ஸ் தவிர்த்து தேசபக்தி கொண்ட மக்கள் தேசிய கொடி ஏற்றுவார்கள் என்று நம்புவோம். வைகோ கூட தேசிய கொடி ஏற்றுவது நல்ல விஷயம் என்று சொன்னார். ஆனால் இந்த மாமேதை சிறுத்தைக்குட்டி அண்ணாத்தே தேசிய கொடி ஏற்றுவது கார்ப்பரேட் சதி என்று சொன்னாரே அது என்னவென்று என் மரமண்டைக்கு புரியவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X