கருணை கொலையை தடுக்க நீதிமன்றத்தில் மனு

Updated : ஆக 13, 2022 | Added : ஆக 13, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
புதுடில்லி : மருத்துவர்கள் உதவியுடன் உயிரை மாய்த்துக் கொள்ளும் கருணை கொலைக்கு தன்னை உட்படுத்திக் கொள்வதற்காக, சுவிட்சர்லாந்து செல்லும் நண்பருக்கு, 'விசா' வழங்கக் கூடாது எனக்கோரி, அவரது தோழி புதுடில்லி உயர் நீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்துஉள்ளார்.குணப்படுத்த முடியாத அல்லது மிகுந்த வலியை தரும் நோயினால், நீண்ட காலமாக பாதிக்கப்பட்டு, நோயுடன் போராட முடியாதவர்கள்,
கருணை கொலை, நீதிமன்றத்தில் மனு, மருத்துவர்கள்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


புதுடில்லி : மருத்துவர்கள் உதவியுடன் உயிரை மாய்த்துக் கொள்ளும் கருணை கொலைக்கு தன்னை உட்படுத்திக் கொள்வதற்காக, சுவிட்சர்லாந்து செல்லும் நண்பருக்கு, 'விசா' வழங்கக் கூடாது எனக்கோரி, அவரது தோழி புதுடில்லி உயர் நீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்துஉள்ளார்.

குணப்படுத்த முடியாத அல்லது மிகுந்த வலியை தரும் நோயினால், நீண்ட காலமாக பாதிக்கப்பட்டு, நோயுடன் போராட முடியாதவர்கள், மருத்துவர்களின் துணையுடன் கருணை கொலைக்கு தங்களை உட்படுத்திக் கொள்வது, 'ஈஸ்தனேஷியா' என அழைக்கப்படுகிறது.


சட்டப்பூர்வம்பெல்ஜியம், கனடா, கொலம்பியா, லக்சம்பர்க், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட ஒரு சில நாடுகளில், கருணை கொலை சட்டப்பூர்வமாக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில், புதுடில்லியை சேர்ந்த 49 வயது பெண் ஒருவர், புதுடில்லி உயர் நீதிமன்றத்தில், மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார். அதன் விபரம்:புதுடில்லியை சேர்ந்த என் நண்பர், 'மையால்ஜிக் என்சிபாலோமையலிட்டிஸ்' என்ற, ஒருவித நரம்பியல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.


latest tamil newsஇந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கடுமையான உடல் சோர்வு, வலி, மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகள் தீவிரமாக இருக்கும். அவர்களுடைய வேலைகளை கூட அவர்களால் செய்ய முடியாது. கடந்த 2014 முதல், என் நண்பருக்கு இந்த நோய் பாதிப்பு உள்ளது. தற்போது, முழுக்க படுத்த படுக்கையாகி விட்டார். வீட்டில் ஓரிரு அடிகள் மட்டுமே நடக்க முடிகிறது.


விண்ணப்பம்புதுடில்லி 'எய்ம்ஸ்' மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கொரோனா பரவலுக்கு பின், சிகிச்சையை தொடர முடியவில்லை. உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ சிகிச்சை பெற, அவருக்கு நிதி வசதி இருக்கிறது. இந்நிலையில், அவர் ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து சென்று, தன்னை கருணை கொலைக்கு உட்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளார். அதில் பிடிவாதமாக உள்ளார்.


சிகிச்சைக்கு செல்வதாகக் கூறி, 'விசா'வுக்கு விண்ணப்பித்துள்ளார். இவர் இறந்துவிட்டால், இவரது வயதான பெற்றோரின் நிலை பரிதாபத்துக்கு உரியதாகிவிடும். எனவே, அவர் சுவிட்சர்லாந்து செல்ல விசா அளிக்கக் கூடாது. மேலும், அவரது உடல் நிலையை பரிசோதித்து சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவை அமைக்க, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramesh - chennai,இந்தியா
13-ஆக-202211:12:04 IST Report Abuse
ramesh பாதிக்க பட்டு அவதி படுபவர்களுக்கு தான் அதன் வலி தெரியும் .சுகபடுத்த முடியாதவர்களுக்கு அவர்கள் விருப்ப பட்டால் கருணைக்கொலை தவறு இல்லை என்று நினைக்கிறேன் .அல்லது இதை எதிர்பவர்களிடம் பாதிக்க பட்டவர்களை கொடுத்து அவர்களை கவனித்து கொள்ள சொல்லலாம் .உதாரணத்திற்கு மூளை வளர்ச்சி இல்லாமல் இருக்கும் குழநதைகளை சிறுகுழந்தையாக இருக்கும் பொது கவனித்து கொள்ளமுடியும் .ஆனால் அதுவே வயது ஏறும் பொது அவர்களை கவனித்து கொள்ளுவது எளிதான காரியம் அல்ல .அதுவும் பெற்றோர்கள் உயிரோடு இருக்கும் வரைதான் அவர்களை கவனிக்க முடியம் அவர்களின் காலத்திற்கு பிறகு பாதிக்கப்பட்டவர் நிலைமை என்னாகும்
Rate this:
Cancel
Manikandan Sivalingam - delhi,இந்தியா
13-ஆக-202210:10:35 IST Report Abuse
Manikandan Sivalingam ஆயிரம்....முறை.... வெட்டி... படுகொலை.... செய்ய... வேண்டிய.....சிவசாமி..... சிவகுமார்...
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
13-ஆக-202209:24:42 IST Report Abuse
Sampath Kumar மனித வாழ்கை இப்போ மிகவும் சிக்கலாகிவருகிறது அதற்கு பல காரணம் உண்டு மனிதன் யாரை கேட்டும் பிறக்கவில்லை அதை போல இறக்கவும் இல்லை இந்த நிலையில் மனிதன் தன்னை மாய்த்து கொள்வது என்பது இயற்கை ஆனா ஓன்று பெற்றோர்கள் உண்டான் இருப்பவர்கள் தங்களது கடமைகளை செய்த பிருகு வேண்டுமானால் முறிச்சிக்கலாம் அதே போல யாரும் இல்லது சில பேர்கள் தங்களை கருணை கொலை செய்ய சொல்வது மிகுந்த பொருத்தமாகும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X