ஆப்கனில் செயல்படும் ரகசிய பள்ளிகள்: தலிபான்களின் தடையை மீறும் பெண்கள்

Updated : ஆக 13, 2022 | Added : ஆக 13, 2022 | கருத்துகள் (22) | |
Advertisement
காபூல் : ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் உத்தரவால் பெண்கள் பள்ளிக் கல்வியை இழந்து ஓராண்டு நிறைவடைந்து விட்டது.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து ஆட்சி முறையில் பல மாற்றங்களை செய்தனர். குறிப்பாக, பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்தனர். சிறுமியர் பள்ளிக்கு செல்ல தடை விதித்தனர். ஆனால்,
afghanistan, taliban, girls school

காபூல் : ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் உத்தரவால் பெண்கள் பள்ளிக் கல்வியை இழந்து ஓராண்டு நிறைவடைந்து விட்டது.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து ஆட்சி முறையில் பல மாற்றங்களை செய்தனர். குறிப்பாக, பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்தனர். சிறுமியர் பள்ளிக்கு செல்ல தடை விதித்தனர். ஆனால், கல்லூரிக்கு செல்வதை தடுக்கவில்லை. இதனால், பள்ளியில் படித்துக் கொண்டிருந்த மாணவியர் ஓராண்டாக வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.


latest tamil news


இந்நிலையில், தலைநகர் காபூலில் வசிக்கும் சோடாபா நஜந்த் என்ற இளம்பெண் தன் சகோதரியுடன் சேர்ந்து வீட்டிலேயே ரகசிய பள்ளி நடத்துகிறார். தலிபான்களின் அட்டூழியத்தால் பள்ளிக் கல்வியை இழந்து தவிக்கும் சிறுமியருக்கு ஆங்கிலம், அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களை கற்பித்து வருகிறார்.

இதுகுறித்து பேசிய சோடாபா நஜந்த், “இந்தச் சிறுமியருகு கல்வி கற்பிப்பதன் வாயிலாக தலிபான்களின் முடிவை எதிர்க்கிறேன். ஆப்கானிஸ்தானின் பல இடங்களில் கடந்த ஓராண்டாக இதுபோன்ற ரகசிய பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதன் வாயிலாக சிறுமியர் பாடங்களை கற்றாலும் அதற்கான அரசு சான்றிதழ் பெற முடியாது. இந்த நிலை மிகவும் வேதனையை ஏற்படுத்துகிறது,'' என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா
13-ஆக-202218:32:28 IST Report Abuse
Veeraputhiran Balasubramoniam இன்னும் சில காலம் தமிழகத்தில் திராவிட மாடல் பாடத்திடப்படி மாணவர்கள் சிரமப்படுகிறார்கள் அதனால் பள்ளி வராமலே பத்தாம் வகுப்பு மற்றூம் பனிரெண்டாம் வகுப்பு படித்த சாண்றிதள் வழங்கப்படலாம் .. இதனை கேள்விப்பட்டவுடன், பெற்றோர் ஆனந்த கண்ணீர் வடித்து இனி வரும் தேர்தல் களில் யார் திராவிட மாடல் கல்வி தொடர்ச் செய்வார்களோ அவர்களுக்கே பிள்ளகளும் வாக்களிக்கும் என பத்திரத்தில் கையொப்பம் இட்டு உத்தரவாதம் அளிப்பர்.
Rate this:
Cancel
13-ஆக-202216:35:08 IST Report Abuse
பேசும் தமிழன் அந்த காட்டு மிராண்டி கூட்டத்தை அணுகுண்டு போட்டு அழிக்க வேண்டும்... அது தான் உண்மையிலேயே இறைவனுக்கு செய்யும் தொண்டு
Rate this:
Cancel
13-ஆக-202214:02:23 IST Report Abuse
kalyanaraman இங்குள்ள ஸ்டாலின், வைகோ, வீரமணி, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் இன்ன பிற சிறுபான்மை காவலர்கள் அங்கே சென்று போராடலாமே. ஓ! அங்கே போய் வாயத்தொறந்தா பெண்டு நிமித்திடுவானே. இஸ்லாமியா சகோதரர்கள் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். இந்தியாதான் உங்களுக்கு சொர்க்கம். போலி மதச்சார்பின்மை பேசும் அரசியல்வாதிகள் வலையில் விழுந்து விடாதீர்கள்.
Rate this:
Rafi - Riyadh,சவுதி அரேபியா
13-ஆக-202217:03:13 IST Report Abuse
Rafi போராட்டம் என்பதே அவரவர்கள் நாட்டில் நடப்பது, அவர்கள் பல ஆண்டுகள் போராடித்தான் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளார்கள், உள்நாட்டு போராட்டங்களை வளர்த்து விட்டவர்கள் ருஷ்ய, அமெரிக்கா போன்ற மேலை நாட்டை சேர்ந்தவர்கள் தான். நாங்கள் வாங்கி கொடுத்த சுதந்திரம் தான் நாம் அனுபவிப்பது. அதற்கு தான் பல பங்கங்கள் எற்படுத்தி ஒட்டு மொத்த மக்களையும் கற்காலத்திற்கு அழைத்து செல்ல ஆயத்தம் ஆவதை தான் சிந்தனையாளர்கள் எச்சரிக்கின்றார்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X