கருணாநிதி நினைவு நாளுக்கு அழகிரி வராதது ஏன்?

Updated : ஆக 13, 2022 | Added : ஆக 13, 2022 | கருத்துகள் (24) | |
Advertisement
முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளுக்கு, அவரது மகன் அழகிரி அஞ்சலி செலுத்த வராதது ஏன் என்பது குறித்து, தி.மு.க., மூத்த நிர்வாகிகள் சிலர் விசாரித்துள்ளனர்.இது குறித்து, அழகிரி ஆதரவாளர்கள் கூறியதாவது: ஆக., 7ல் கருணாநிதி நினைவு நாள். ஆண்டுதோறும் இந்நாளில் சென்னை வந்து, அவரது நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்துவதை, அழகிரி வாடிக்கையாக வைத்திருந்தார். ஆனால், இந்த
கருணாநிதி நினைவு நாளுக்கு அழகிரி வராதது ஏன்?

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளுக்கு, அவரது மகன் அழகிரி அஞ்சலி செலுத்த வராதது ஏன் என்பது குறித்து, தி.மு.க., மூத்த நிர்வாகிகள் சிலர் விசாரித்துள்ளனர்.



இது குறித்து, அழகிரி ஆதரவாளர்கள் கூறியதாவது: ஆக., 7ல் கருணாநிதி நினைவு நாள். ஆண்டுதோறும் இந்நாளில் சென்னை வந்து, அவரது நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்துவதை, அழகிரி வாடிக்கையாக வைத்திருந்தார். ஆனால், இந்த ஆண்டு அவரால் வர முடியவில்லை.அவரது காலில் ஏற்பட்டிருக்கும் காயத்திற்கு, சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதே காரணம். அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என, மருத்துவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.



latest tamil news

சகோதரர் அழகிரியை சந்தித்து உடல் நலம் விசாரிக்க, முதல்வர் ஸ்டாலின் விருப்பப்பட்டு உள்ளார். ஆனால், இதை முதல்வரின் நெருங்கிய வட்டாரத்தில் உள்ள சிலர் விரும்பவில்லை. அதனால், சகோதரர் சந்திப்பை ஸ்டாலின் தள்ளி போட்டு விட்டார்.



இருந்தபோதும், தன் சார்பில் குடும்ப உறுப்பினர் ஒருவரை அனுப்பி, அழகிரியிடம் நலம் விசாரிக்க செய்துள்ளார். அரசு நிகழ்ச்சிகளுக்காக மதுரைக்கு செல்லும்போது, அழகிரி வீட்டுக்கு வந்து, ஸ்டாலின் நலம் விசாரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.



-- நமது நிருபர் --

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (24)

sankar - new jersy,யூ.எஸ்.ஏ
13-ஆக-202218:47:19 IST Report Abuse
sankar என்ன மன கசப்பு . ஸ்டாலின் ஒரு உத்தமர்
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
13-ஆக-202217:17:26 IST Report Abuse
sankar வேறு பயனுள்ள செய்திகளை போடுங்கள்.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
13-ஆக-202215:08:32 IST Report Abuse
Vena Suna காலில் ஏற்பட்ட காயம் அல்ல.மனதில் ஏற்பட்டது. நியாய பிரகாரம் அவர் தான் அரசியல் வாரிசு. கருணாநிதி அவருக்கு செய்த துரோகம் அவரை அப்படி ஆக்கி விட்டது. பாவம்.
Rate this:
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
13-ஆக-202215:57:22 IST Report Abuse
தமிழ்வேள்தலித்துகளை ஆதரிப்பதாக சொல்லி ஊரை ஏமாற்றிய கட்டுமரம் , நியாயமாக தலித் பெண்ணை மணந்து நல்ல குடும்ப தலைவனாக வாழ்ந்துவரும் அழகிரிக்குத்தான் ஆதரவை தெரிவித்து இருக்கவேண்டும் ...சாதி வெறி மிஞ்சிய காரணத்தால் கட்டுமரம் அழகிரியை குடும்பத்திலிருந்து ஒதுக்கியது ..கட்டுமரம் ஒன்று லேசுப்பட்டது கிடையாது .....அண்ணா காட்டிய வழியில் , வாயில் வடைதட்டிக்கொண்டே, காலத்தை ஒட்டிவிட்டது .......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X