சர்வதேச யானைகள் தின கொண்டாட்டம்; 'கஜ் கவுரவ்' விருது பெற்று அசத்தல்

Added : ஆக 13, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி : பொள்ளாச்சி, டாப்சிலிப்பில், வனத்துறையினர் சர்வதேச யானைகள் தினம் கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும், பழங்குடியின மக்கள் யானைகளை சிறப்பாக பராமரிப்பதற்கான விருது பெற்றனர்.பொள்ளாச்சி, டாப்சிலிப்பில், 26 யானைகளை வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர். கலீம், வெங்கடேஸ், மாரியப்பன் உள்பட பல்வேறு கும்கி யானைகள் உள்ளன. இதில், ஆறு யானைகள் வரகளியாறிலும் மற்ற யானைகள்
சர்வதேச யானைகள் தினம், கஜ் கவுரவ் விருது,  டாப்சிலிப் மலசர் பழங்குடி மக்கள் , International Elephant Day, Gaj Gaurav Award, Topslip Malasar palangudi makkal,


பொள்ளாச்சி : பொள்ளாச்சி, டாப்சிலிப்பில், வனத்துறையினர் சர்வதேச யானைகள் தினம் கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும், பழங்குடியின மக்கள் யானைகளை சிறப்பாக பராமரிப்பதற்கான விருது பெற்றனர்.பொள்ளாச்சி, டாப்சிலிப்பில், 26 யானைகளை வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர். கலீம், வெங்கடேஸ், மாரியப்பன் உள்பட பல்வேறு கும்கி யானைகள் உள்ளன.

இதில், ஆறு யானைகள் வரகளியாறிலும் மற்ற யானைகள் கோழிகமுத்தியிலும் வைத்து பராமரிக்கப்படுகிறது.இந்நிலையில், நேற்று சர்வதேச யானைகள் தினம் டாப்சிலிப்பில் கொண்டாடப்பட்டது. இதில், வனத்துறை பணியாளர்கள் மற்றும் பாகன்கள் பங்கேற்றனர். கோழிகமுத்தியில் முகாம் யானைகளை வரிசையாக நிறுத்தி, சிறப்பு பூஜைகள் செய்து, பொங்கல் வைத்தனர்.குட்டி யானையை வைத்து, அங்குள்ள விநாயகர் கோவிலில், கஜ பூஜை நடத்தினர். யானைகளுக்கு பொங்கல், சத்தான உணவு, பழங்கள் கொடுத்தனர்.மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், யானைகளை சிறப்பான முறையில் பராமரித்து அவற்றை பாதுகாத்து வரும், தனிநபர் மற்றும் சமூகத்துக்கு, 'கஜ் கவுரவ்' என்ற விருதை அறிவித்தது.

இதில், யானைகளை அன்போடு பராமரிக்கும், டாப்சிலிப் மலசர் இன பழங்குடியின மக்களுக்கு சமூகம் பிரிவுக்கான விருது அறிவிக்கப்பட்டது. நேற்று, கேரள மாநிலம் தேக்கடி புலிகள் காப்பகத்தில், இந்த விருதை வனச்சரக அலுவலர் காசிலிங்கம் தலைமையிலான பாகன்கள் மற்றும் பழங்குடியின மக்கள் பெற்றனர்.விழிப்புணர்வு பேரணி


ஆனைமலை புலிகள் காப்பகத்தில், உலக யானைகள் தினத்தை முன்னிட்டு, வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இருவனச்சரகத்தின் சார்பில், விழிப்புணர்வு பேரணி நடந்தது. வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லுாரி வளாகம் முன் நடந்த விழிப்புணர்வு பேரணிக்கு, வனச்சரக அலுவலர்கள் மணிகண்டன், வெங்கடேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர்.

பேரணியை நகராட்சி கமிஷனர் பாலு, அரசு கலை அறியவில் கல்லுாரி முதல்வர் செல்வமுத்துக்குமாரசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர்.பேரணியில், காடுகளை பாதுகாக்கும் யானைளை பாதுகாப்போம். குடியிருப்பு அருகே வரும் யானைகளை துன்புறுத்தக்கூடாது. யானை - மனித மோதலை தடுப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாணவர்கள் பாதகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X