அதிகாரிகளின் அலட்சியப்போக்கு மாறணும்!

Added : ஆக 13, 2022 | |
Advertisement
கோவை : கோவையில் ரோடுகள் சீரமைப்புப் பணிகளையும், மற்ற வளர்ச்சிப் பணிகளையும் ஒருங்கிணைத்துச் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததே, பெரும்பாலான ரோடுகள் படுமோசமாகி, மக்கள் அவதிப்படுவதற்குக் காரணமாகியுள்ளது.கோவை நகரின்பல்வேறு முக்கிய ரோடுகளிலும் பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. பாதாள சாக்கடைத் திட்டம், 24x7 குடிநீர் திட்டம்,வீடுகளுக்கான பைப் லைன் காஸ்
அதிகாரிகளின் அலட்சியப்போக்கு மாறணும்!


கோவை : கோவையில் ரோடுகள் சீரமைப்புப் பணிகளையும், மற்ற வளர்ச்சிப் பணிகளையும் ஒருங்கிணைத்துச் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததே, பெரும்பாலான ரோடுகள் படுமோசமாகி, மக்கள் அவதிப்படுவதற்குக் காரணமாகியுள்ளது.கோவை நகரின்பல்வேறு முக்கிய ரோடுகளிலும் பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

பாதாள சாக்கடைத் திட்டம், 24x7 குடிநீர் திட்டம்,வீடுகளுக்கான பைப் லைன் காஸ் திட்டம் என பல்வேறு வளர்ச்சிப் பணிகளும் ஒரே நேரத்தில்மேற்கொள்ளப்படுகின்றன. இந்தத் திட்டங்களுக்காக, முக்கிய ரோடுகள் அனைத்தும்தோண்டப்பட்டுள்ளன.முன்பெல்லாம் நகருக்குள் ஒரே ஒரு ரோடு விரிவாக்கப் பணி நடந்தாலும், அந்த ரோட்டில் குடிநீர்த் திட்ட குழாய்கள், மின் கம்பங்களை மாற்றி அமைப்பது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது போன்ற பணிகளுக்காக, பல்வேறு துறை அதிகாரிகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம், கலெக்டரால் நடத்தப்படும். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அப்படிப்பட்ட கூட்டம் நடந்தது சந்தேகமாக உள்ளது.இதனால், துறைகளுக்குள் ஒருங்கிணைப்பு இல்லாததோடு, உரசலும் அதிகரித்துள்ளது.

மருதமலை ரோடு, சுந்தராபுரம்-மதுக்கரை ரோடு, குறிச்சி-போத்தனுார் ரோடு, இடையர்பாளையம்-கவுண்டம்பாளையம் ரோடு உள்ளிட்ட பல்வேறு முக்கியமான ரோடுகளிலும் இந்த முட்டல், மோதல் அதிகமாக நடக்கிறது. மின்வாரியம், குடிநீர் வடிகால் வாரியம், பணிகளை தாமதிப்பதால், ரோடுக்கு டெண்டர் விட்டும் பணிகளைத் துவங்க முடியவில்லை என்று மாநில நெடுஞ்சாலைத்துறையினர் குற்றம் சாட்டுகின்றனர். பணியைத் துவக்க அனுமதிக்கவே தாமதப்படுத்திவிட்டனர் என்று, வாரிய அதிகாரிகள்பதில் தருகின்றனர்.

சூயஸ் நிறுவனம் பணிகளை மெதுவாகச் செய்வதாக, மாநகராட்சி அதிகாரிகளும், கவுன்சிலர்களும் புகார்களை அடுக்குகின்றனர். இந்தியன் ஆயில் நிறுவனம், பணிகளை மிகவும்தாமதப்படுத்துவதாக, மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் குமுறுகின்றனர். மற்ற பணிகள் தாமதமாவதால், நகரிலுள்ள பெரும்பாலான ரோடுகளின் நிலை மோசமாகி, மக்களை வாட்டி வதைக்கின்றன.

குறிப்பாக, டூ வீலர்களைப் பயன்படுத்தும் லட்சக்கணக்கான மக்கள், படும்பாடு சொல்லி மாளாது. இனியாவதுமாதத்துக்கு ஓரிரு முறை, துறைஅதிகாரிகளை ஒருங்கிணைத்து, கூட்டங்களை நடத்தி, குறிப்பிட்ட காலக்கெடு விதித்து, உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X