அனைவரும் வருக... வருக!| Dinamalar

அனைவரும் வருக... வருக!

Added : ஆக 13, 2022 | கருத்துகள் (1) | |
'தினமலர்' நாளிதழ் நடத்தும், 75வது சுதந்திர தின பவள விழா மொல்லோட்டத்திற்கு, பதிவு செய்த மற்றும் பதிவு செய்யாதவர்களும், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், தன்னார்வலர்கள், அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் தாராளமாக பங்கேற்கலாம்.450 அடி நீளத்துக்கு தேசிய கொடிதிருப்பூர், காங்கயம் ரோட்டிலுள்ள பாரதி வித்ய பவன் பள்ளி சார்பில், அதன் மாணவ, மாணவியர், 450 அடி
75வது சுதந்திர தினவிழா,  மொல்லோட்டம்,  தேசிய கொடி , 75th Independence Day, Thesiya kodi, National Flag,

'தினமலர்' நாளிதழ் நடத்தும், 75வது சுதந்திர தின பவள விழா மொல்லோட்டத்திற்கு, பதிவு செய்த மற்றும் பதிவு செய்யாதவர்களும், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், தன்னார்வலர்கள், அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் தாராளமாக பங்கேற்கலாம்.


450 அடி நீளத்துக்கு தேசிய கொடி


திருப்பூர், காங்கயம் ரோட்டிலுள்ள பாரதி வித்ய பவன் பள்ளி சார்பில், அதன் மாணவ, மாணவியர், 450 அடி நீளத்துக்கு தேசிய கொடியினை ஏந்தி, மெல்லோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பிக்கின்றனர்.


75 வகையான மரக்கன்று


நம் நாட்டின், 75 வது சுதந்திர தின பவள விழா நினைவாக, கலெக்டர் அலுவலக வளாகத்தில், 75 பல்வேறு விதமான பயனளிக்கும் மரக்கன்றுகளை, வனத்துக்குள் திருப்பூர் குழுவினர் நடுகின்றனர்.


விழிப்புணர்வு பதாகை எடுத்து வரலாம்


தனி நபர்கள், பொதுமக்கள், நெகிழி ஒழிப்பு, மழை நீர் சேகரிப்பு, மரம் வளர்ப்பு, தேச ஒருமைப்பாடு குறித்தான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைளை எடுத்து வரலாம்.


தேச பக்தி கலை நிகழ்ச்சி


மெல்லோட்டத்தில் பங்குபெறும் மக்களை, உற்சாகப்படுத்தும் விதமாக நான்கு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மேடையில், தேச பக்தியை வெளிப்படுத்தும் விதமாக, முருகன் பவள கும்மியாட்டம், சங்கமம் ஒயிலாட்டம், கொங்கு பெருஞ்சலங்கையாட்டம், சாய்கிருஷ்ணா நுண்கலைக்கூட தேச பக்தி பரதம் ஆகியன நடைபெறுகிறது.


தேசிய கொடி மட்டுமே...


மெல்லோட்டத்தில் பங்கேற்கும் தனி நபர்கள், பொது அமைப்பினர் அனைவரும் தேசிய கொடியினை மட்டுமே ஏந்தி பங்கேற்க வேண்டும். பிற கொடிகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அனைவரும் சிறிய மற்றும் பெரிய கொடிகளை கொண்டு வரலாம்.


பேனர் கொண்டுவரலாம்


பங்கேற்கும் பள்ளி, கல்லுாரிகள், அமைப்பினர், தொண்டு மற்றும் சேவை நிறுவனத்தினர், தாங்கள் சார்ந்த அமைப்பின் பெயர் பொறித்த பேனர்களை கொண்டு வரலாம்.


பொறுமையாகநடக்கலாம்!


நாளை நடப்பது, மெல்லோட்டம் என்றாலும் கூட, பள்ளி குழந்தைகள், முதியோர்கள் ஓட முடியாது என்று கவலைப்பட வேண்டாம். சீரான வேகத்தில் நடந்து செல்லலாம். நம் நோக்கம், தேச பக்தியுடன், தேசிய ஒருமைப்பாடு காத்து, சமூக முன்னேற்றம் ஏற்பட ஒற்றுமையாக அணிவகுக்க வேண்டும். எனவே, சிறுவர், சிறுமியர், முதியோர் வரை அனைவருமே இந்த மாபெரும் மெல்லோட்டத்தில் பங்கேற்று, வரலாற்றின் பக்கத்தில் இடம் பெறலாம்.


தேசிய கொடிமட்டுமே...


மெல்லோட்டத்தில் பங்கேற்கும் தனி நபர்கள், பொது அமைப்பினர் அனைவரும் தேசிய கொடியினை மட்டுமே ஏந்தி பங்கேற்க வேண்டும். பிற கொடிகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அனைவரும் சிறிய மற்றும் பெரிய கொடிகளை கொண்டு வரலாம்.


பேனர் கொண்டுவரலாம்


பங்கேற்கும் பள்ளி, கல்லுாரிகள், அமைப்பினர், தொண்டு மற்றும் சேவை நிறுவனத்தினர், தாங்கள் சார்ந்த அமைப்பின் பெயர் பொறித்த பேனர்களை கொண்டு வரலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X