முதியவரை கட்டிப்போட்டு திருடிய காதலர்கள்

Added : ஆக 13, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
கோவை : கோவையில், பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து முதியவரை கட்டிப்போட்டு திருட முயன்ற காதலர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.கோவை வடவள்ளி அடுத்த பொம்மணம்பாளையத்தை சேர்ந்தவர் பெரிய ராயப்பன்,76. இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். பொம்மணம்பாளையத்தில் பெரிய ராயப்பனும் அவரது மனைவி மட்டுமே வசித்து வருகின்றனர்.ராஜம்மாள், நேற்று
 கோவை முதியவர்,  பட்டப்பகல் திருட்டு, காதலர்கள் கைது,  Coimbatore muthiyavar, thiruttu,

கோவை : கோவையில், பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து முதியவரை கட்டிப்போட்டு திருட முயன்ற காதலர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.கோவை வடவள்ளி அடுத்த பொம்மணம்பாளையத்தை சேர்ந்தவர் பெரிய ராயப்பன்,76. இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

பொம்மணம்பாளையத்தில் பெரிய ராயப்பனும் அவரது மனைவி மட்டுமே வசித்து வருகின்றனர்.ராஜம்மாள், நேற்று காலை பரிசோதனைக்காக மருத்துவமனை சென்றார். வீட்டில் பெரியராயப்பன் மட்டும் தனியாக இருந்துள்ளார்.

இந்நிலையில், பகல், 2:00 மணிக்கு, இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு ஆணும், பெண்ணும், குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். அவர் தண்ணீர் எடுக்க சென்றபோது, வீட்டுக்குள் புகுந்த இருவரும், பெரியராயப்பனை கட்டிப்போட்டுவிட்டு, பீரோவில் இருந்த லாக்கரை உடைக்க முயன்றனர்.

முடியாததால், அங்கிருந்த பர்சில் இருந்து 2,000 ரூபாயை எடுத்துவிட்டு, வீட்டை விட்டு வெளியே சென்றனர்.அப்போது, வெளியூரில் இருந்து மகனும், மருமகளும் வந்துள்ளனர். கட்டப்பட்ட நிலையில் இருந்த பெரியராயப்பன், தப்பிச் சென்ற திருட்டு ஜோடியை பிடிக்குமாறு கையால் சைகை செய்துள்ளார். இதையடுத்து, அருகில் உள்ளவர்களின் உதவியுடன் இருவரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.பிடிபட்ட இருவரிடமும், வடவள்ளி இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை விசாரணை செய்தார். விருதுநகரை சேர்ந்த தினேஷ்குமார்,23, பொறியியல் பட்டதாரி; திருச்சியைச் சேர்ந்த செண்பகவல்லி,24 எம்.பி.ஏ., மாணவி என தெரியவந்தது.

இருவரும் சமூக வலைதளம் வாயிலாக பழகி காதலர்களாக மாறி உள்ளனர். கோவை சிங்காநல்லூரில் தங்கி வருகின்றனர். இதற்கு முன், பி.என்.புதூரில், இதே போன்று ஒரு முதியவரை கட்டி போட்டு, 20 ஆயிரம் ரூபாய் பறித்து சென்றது தெரியவந்தது. இவர்களிடமிருந்து, இரும்பு கம்பி, கயிறு, சுத்தி, இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
14-ஆக-202200:10:17 IST Report Abuse
Matt P எம் பி எ படிச்சிட்டு இப்படி ஒரு பிசினஸ்.....அவள் எம் பி எ அவன் பொறியியல் ....படிச்சிட்டு பொறியஆ இப்படி ஒரு பிசினஸ்.....நாட்டில வேலை கிடைப்பது அவ்வளவு கஷ்டமா?
Rate this:
Cancel
13-ஆக-202217:18:29 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் கட்டிப்போட்டு கொள்ளையடிக்க பொறியியலோ, நிர்வாகப்படிப்போ தேவையில்லையே ? ...... இதுதான் திராவிட மாடலோ ?
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
13-ஆக-202217:03:04 IST Report Abuse
S.Baliah Seer ?பொதுமக்கள் அவர்களைக் கட்டிவைத்து நையப்புடைத்திருக்கிறார்கள்.போலீஸ் மீட்காவிட்டால் அதோகதி ஆகியிருக்கும்.காகிதப் பட்டங்களால் நாடு குப்பையானதுதான் மிச்சம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X