அரசின் கண்காணிப்பில் கருத்தரிப்பு மையங்கள்

Updated : ஆக 13, 2022 | Added : ஆக 13, 2022 | |
Advertisement
சென்னை : ''தமிழகத்தில் கருத்தரிப்பு சிகிச்சை மையங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. தவறு செய்யும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மக்கள் நல்வாழ்வு அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.சென்னை எழும்பூரில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, 'கார்போவாக்ஸ்' கொரோனா 'பூஸ்டர்' தடுப்பூசி போடும் பணியை, அமைச்சர் சுப்பிரமணியன், நேற்று துவக்கி
அரசு கண்காணிப்பு, கருத்தரிப்பு மையங்கள்,



சென்னை : ''தமிழகத்தில் கருத்தரிப்பு சிகிச்சை மையங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. தவறு செய்யும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மக்கள் நல்வாழ்வு அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.சென்னை எழும்பூரில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, 'கார்போவாக்ஸ்' கொரோனா 'பூஸ்டர்' தடுப்பூசி போடும் பணியை, அமைச்சர் சுப்பிரமணியன், நேற்று துவக்கி வைத்தார்.

பின், அமைச்சர் அளித்த பேட்டி:நாடு முழுதும், 'கார்போவாக்ஸ்' கொரோனா தடுப்பூசியை, பூஸ்டர் டோசாக பயன்படுத்த, மத்திய அரசு, இரண்டு நாட்களுக்கு முன் தான் அனுமதி வழங்கியது. தற்போது, தமிழகத்தில் அவ்வகை தடுப்பூசி போடும் பணி துவங்கியுள்ளது. 'கோவாக்சின், கோவிஷீல்டு' வகையில், இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்களும், 'கார்போவாக்ஸ்' தடுப்பூசியை போட்டு கொள்ளலாம்.மத்திய அரசு தடுப்பூசி குறித்த எந்த அறிவிப்பு வெளியிட்டாலும், உடனடியாக தமிழகத்தில் செயல்படுத்துகிறோம்.


latest tamil news



தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், தடுப்பூசி செலுத்தும் திட்டம், ஒரு இயக்கமாக நடக்கிறது.அதன் விளைவாக, தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களில், முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் 95.9 சதவீதம்; இரண்டாம் தவணை செலுத்தியவர்கள், 89.41 சதவீதமாக உள்ளது. தற்போது இலவசமாக செலுத்தப்பட்டு வரும் பூஸ்டர் தடுப்பூசியை, மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. விதிமுறைகள் மீறும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அரசு சார்பில் இரண்டு இடங்களில் கருத்தரிப்பு மையங்கள் துவங்கப்படும். அதேபோல், 709 நகர்ப்புற மருத்துவமனைகள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X