மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டத்தில்...தில்லாலங்கடி!

Updated : ஆக 13, 2022 | Added : ஆக 13, 2022 | கருத்துகள் (20) | |
Advertisement
திருவள்ளூர் மாவட்டத்தில், 100 நாள் வேலை திட்டத்தில், பணியாளர்களின் ஊதியத்தை பங்கிட்டுக் கொள்வது, வேண்டிய நபர்களுக்கு பணி தருவது உள்ளிட்ட மோசடி நடந்து வருகின்றன. இவற்றை கண்காணிக்க வேண்டிய பணிதள பொறுப்பாளர்களின் பணியிலும் மோசடி நடப்பதாக புகார் எழுந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், 14 ஒன்றியங்களில், 526 ஊராட்சிகளில் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்
மத்திய அரசு,  100 நாள் வேலை திட்டம், பொறுப்பாளர்கள், பணியில் மோசடி,


திருவள்ளூர் மாவட்டத்தில், 100 நாள் வேலை திட்டத்தில், பணியாளர்களின் ஊதியத்தை பங்கிட்டுக் கொள்வது, வேண்டிய நபர்களுக்கு பணி தருவது உள்ளிட்ட மோசடி நடந்து வருகின்றன. இவற்றை கண்காணிக்க வேண்டிய பணிதள பொறுப்பாளர்களின் பணியிலும் மோசடி நடப்பதாக புகார் எழுந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில், 14 ஒன்றியங்களில், 526 ஊராட்சிகளில் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.ஏரி மற்றும் குளங்களின் நீர்வரத்து கால்வாயை சீரமைப்பது, சாலைகளில் வளரும் செடி, மரங்களை அகற்றுதல், தடுப்பணை மற்றும் அரசு கட்டடங்கள் கட்டுவது என, பல பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.


முறைகேடுஇதற்காக, 14 ஒன்றியங்களிலும் 2.84 லட்சம் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, ஒரு நபருக்கு, 100 நாள் மட்டும் வேலை வழங்கப்படுகிறது. இதில், 80 சதவீதம் பெண் பயனாளிகளும், 20 சதவீதம் ஆண் பயனாளிகளும் உள்ளனர்.இப்பணியில் ஈடுபடும் தொழிலாளிகளுக்கு, நாள் ஒன்றுக்கு 273 ரூபாய் கூலி நிர்ணயம் செய்து, அந்த தொகை அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக சென்றடைகிறது.பயனாளிகள் வேலை செய்வதை கண்காணிக்கவும், அவர்களின் வருகையை பதிவு செய்யவும், குறைந்தபட்சம் 100 பயனாளிகளுக்கு, ஒரு பணிதள பொறுப்பாளர் நியமிக்கப்படுவர்.


latest tamil newsஓர் ஊராட்சிக்கு, மூன்று பணிதள பொறுப்பாளர்கள் இருப்பர்.இவர்களுக்கும் அதே 100 நாள் பணி தான் தர வேண்டும். சுழற்சி முறையில் இவர்களின் பணி மாற்றப்படும்.ஆனால், மாவட்டத்தின் பெரும்பாலான ஊராட்சிகளில், பணிதள பொறுப்பாளர்கள் மாற்றப்படுவது இல்லை.இதனால், அவர்கள் தங்கள் விருப்பம்போல் பணி செய்ததாக கணக்கு காட்டி, ஊதியம் பெற்று வருகின்றனர்.மேலும், பணிதள பொறுப்பாளர்களின் பணியிடங்களுக்கு, ஊராட்சி தலைவரின் உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்களே, ஆண்டு முழுதும் பணி செய்து வருகின்றனர். இதில், முறைகேடு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.


குளறுபடிகடம்பத்துார் ஒன்றியத்தைச் சேர்ந்த, 100 நாள் திட்ட பணியாளர்கள் கூறியதாவது:பணிதள பொறுப்பாளராக இருப்போர், தங்கள் விருப்பம்போல் பணிக்கு வந்ததாக கூறி சம்பளம் பெற்று விடுகின்றனர். தவிர, தங்களுக்கு வேண்டப்பட்ட நபர்களுக்கே, அவர்கள் பணி தருகின்றனர்.மேலும், ஓர் ஊராட்சியில் மூன்று பணிதள பொறுப்பாளர்கள் இருக்க வேண்டும். இப்பகுதியைச் சேர்ந்த ஒருவர், மூன்று பொறுப்பாளர்களுக்கு உண்டான பணி நாட்களை, உறவினரின் பெயரில் மாற்றி, ஊதியத்தை முறைகேடாக பெற்று வருகிறார்.வேலையே செய்யாமல், மூன்று பணிதள பொறுப்பாளர்களின் சம்பளத்தை ஒருவரே பெறுகிறார். ஆனால், 100 நாட்களுக்கு பின், வேலை கிடைக்காமல் படாதபாடு படும் எங்களுக்கு, வேலை நாட்களை கூட்டுவதில்லை; அதேபோல், கிடைக்கும் சம்பளத்திலும் பல்வேறு குளறுபடி நடந்து வருகிறது.பிற வேலைகளுக்கு செல்லும் பெண்களின் பெயரில், 100 நாள் திட்ட பணிக்கான அட்டை வாங்கி, அவர்கள் பணிக்கு வந்தது போல் கணக்கு காட்டி, ஊதியம் பெறுகின்றனர்.

அதில், 75 சதவீத ரூபாயை பணிதள பொறுப்பாளர்கள், தலைவர் எடுத்துக் கொண்டு, 25 சதவீதம் ரூபாயை, பணி அட்டை பெற்றுள்ள பெண்ணுக்கு தருகின்றனர். சில பணிதள பொறுப்பாளர்கள் பயனாளிகளிடம், 'உனக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும் என்றால், எனக்கும், ஊராட்சி தலைவருக்கும் கணிசமாக தொகை வழங்க வேண்டும்' என கட்டாயப்படுத்தி வசூலிக்கின்றனர்.இந்த மோசடி, இங்கு மட்டுமில்லாமல், மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் நடக்கிறது.இந்த முறைகேடை தவிர்க்க, புகைப்படம் எடுப்பதுடன், பயனாளிகளின் கைவிரல் ரேகையை வருகை பதிவேட்டில் பதிய வேண்டும்.இது குறித்து வெளியே சொன்னால், எங்களுக்கு கிடைக்கும் பணியும் கிடைக்காது. மாவட்ட நிர்வாகம் தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


சிக்கல்பெயர் குறிப்பிடாத வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர் கூறியதாவது:தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரியும் பணிதள பொறுப்பாளர்களுக்கு, 100 நாள் மட்டுமே பணி தர வேண்டும். ஒரு முறை பணி கொடுத்தால், அதன் பின் ஓராண்டு கழித்து தான் அப்பணியை மேற்கொள்ள வேண்டும்.நாங்களும் அவ்வாறே செய்யும்படி தான் ஊராட்சி தலைவர் மற்றும் செயலர்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம்.ஆனால், சில தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் தலையீடால், சுழற்சி முறையில் பணிதள பொறுப்பாளர்கள் நியமிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.இப்பிரச்னை குறித்து, மாவட்ட கலெக்டர் கவனத்திற்கு எடுத்துச் சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
John Miller - Hamilton,பெர்முடா
13-ஆக-202220:35:42 IST Report Abuse
John Miller .....
Rate this:
Cancel
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
13-ஆக-202220:25:55 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy எவ்வாறு வேலை செய்யவேண்டும் என்கிற பயிற்சியை இந்த திட்டம் போதிந்துள்ளது. இதில் பயர்த்தி பெற்றவர்கள் விவசாய வேலை செய்யும் போது எவ்வளவு வேலை இழப்பு என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்டவர்களுக்கு கிடைக்கும் வருமானம் திருப்ப்தியாகவும் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். பணியின் தரத்தை பற்றியே பணம் பெறும் பயனாளிகள் பற்றி எந்த ஆய்வும் கிடையாது. தின கூலி மிகவும் அதிகம். 150 - 200 சரியாக இருக்கும், இருந்தால். விவசாயிகள் வாழமுடியும்.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
13-ஆக-202218:47:34 IST Report Abuse
vbs manian இந்த திட்டத்தில் ஊழல் தவிர எதுவும் நடக்கவில்லை. ஆண்கள் சீட்டு விளையாடி பெண்கள் கோலம் போட்டு பொழுது போக்கி வரிப்பணத்தை சம்பளமாக பெறுகின்றனர். உள்ளூர் அரசியல் வாதி நல்ல காசு பார்க்கிறார்கள்.பல முறை மீடியாக்களில் வெளி வந்துள்ளது. யாரும் கண்டு கொள்வதில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X