சண்டையை விலக்க சென்றவர் குத்தி கொலை: இன்றைய கிரைம் ரவுண்ட் அப்| Dinamalar

சண்டையை விலக்க சென்றவர் குத்தி கொலை: இன்றைய 'கிரைம் ரவுண்ட் அப்'

Updated : ஆக 13, 2022 | Added : ஆக 13, 2022 | கருத்துகள் (1) | |
சண்டையை விலக்க சென்றவர் குத்தி கொலைவிஜயபுரா : விஜயபுராவில், தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய பரசுராம், 30, குருபாதேஸ்வரா நகரில் வாடகை வீட்டில் வசித்தார். நேற்று காலை என்ன காரணத்தாலோ, வீட்டு உரிமையாளரும், அவரது மனைவியும் சண்டை போட்டனர். பரஸ்பரம் தாக்கிக்கொண்டனர்.இதை பார்த்த பரசுராம், சண்டையை விலக்கி விட முயற்சித்தார். அப்போது வீட்டு உரிமையாளர் மனைவியின்
Crime, Murder, Robbery, Police, Arrested,சண்டையை விலக்க சென்றவர் குத்தி கொலை


விஜயபுரா : விஜயபுராவில், தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய பரசுராம், 30, குருபாதேஸ்வரா நகரில் வாடகை வீட்டில் வசித்தார்.

நேற்று காலை என்ன காரணத்தாலோ, வீட்டு உரிமையாளரும், அவரது மனைவியும் சண்டை போட்டனர். பரஸ்பரம் தாக்கிக்கொண்டனர்.இதை பார்த்த பரசுராம், சண்டையை விலக்கி விட முயற்சித்தார். அப்போது வீட்டு உரிமையாளர் மனைவியின் உறவினர்கள், கத்தியால் பரசுராமை குத்தினர். காயமடைந்த அவர் உயிரிழந்தார்.ஜலநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


இளம்பெண்ணைத் தாக்கிய சகோதரர்கள் மீது வழக்கு


விழுப்புரம் : முன்விரோத தகராறில் இளம்பெண்ணைத் தாக்கிய சகோதரர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.விழுப்புரம் அடுத்த கெங்கராம்பாளையத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் மனைவி ஜெயந்தி, 27; பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் ஞானவேல். இருவரது குடும்பத்திற்கும், வீட்டுமனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது.

கடந்த 11ம் தேதி அப்பகுதியில் நடந்த சவ ஊர்வலத்தில் ஞானவேல், அவரது தம்பி ஜெயவேல் ஆகியோர் குடிபோதையில் ஜெயந்தியை திட்டி தாக்கினர்.புகாரின்பேரில், ஞானவேல், ஜெயவேல் மீது வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


கஞ்சா விற்ற சிறுவன் கைதுவிழுப்புரம் : கஞ்சா விற்ற சிறுவனை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மேற்கு போலீசார் நகராட்சி குப்பை கிடங்கு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, வரதப்பன்நாயக்கன் தோப்பைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.இது குறித்து விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்கு பதிந்து, சிறுவனை கைது செய்து விசாரிக்கின்றனர்.


பெண்ணிடம் ரூ.11 லட்சம் மோசடி: காப்பக ஊழியர் கைதுபுதுச்சேரி : குழந்தைகள் காப்பக நிர்வாகியிடம் ரூ. 11 லட்சம் மோசடி செய்த ஊழியரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி, திம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சரண்யா, 33; கிருமாம்பாக்கத்தில் குழந்தைகள் காப்பகம் நடத்தி வருகிறார். இவர் தனது தேவைக்காக, கடந்த 2018 முதல் 2019 வரையில் புதுச்சேரி புஸ்சி வீதியில் உள்ள கத்தோலிக் சிரியன் வங்கியில் நகைகளை அடகு வைத்திருந்தார்.

அதற்கு வட்டி கட்டவில்லை.இந்நிலையில், வங்கி நிர்வாகம் கடந்த 2020 ஜனவரி மாதம் ரூ.12.5 லட்சம் செலுத்தி நகைகளை மீட்டுக் கொள்ளுமாறும், தவறினால் நகை ஏலம் விடப்படும் எனவும் சரண்யாவிற்கு கடிதம் அனுப்பியது. அதனைத் தொடர்ந்து சரண்யா, அதே ஆண்டு மார்ச் மாதம் காப்பகத்தில் வேலை செய்த புதுச்சேரி நைனார்மண்டபத்தை சேர்ந்த வைத்தீஸ்வரன், 39, என்பவரிடம் ரூ.10 லட்சம் பணத்தை கொடுத்து, வங்கியில் நகைக் கடனுக்கு கட்டுமாறு கூறினார்.

வங்கிக்கு சென்ற வைத்தீஸ்வரன், சரண்யாவிற்கு போன் செய்து பணத்தை கட்டி விட்டதாகவும், இன்னும் ரூ.2.5 லட்சம் கட்டினால், நகைகளை மீட்டுக் கொள்ளலாம் எனக் கூறினார். அதனைத் தொடர்ந்து, சரண்யா கடந்தாண்டு பிப்ரவரி மாதம் நகைகளை மீட்க சென்றபோது, நகைககள் ஏற்கனவே மீட்கப்பட்டு விட்டதாக வங்கி ஊழியர்கள் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்தார்.

விசாரணையில், வைத்தீஸ்வரன் வங்கி ஊழியர்களின் உதவியுடன் போலியாக சரண்யாவின் கையெழுத்திட்டு நகைகளை மீட்டு, மீண்டும் சரண்யா பெயரில் அடகு வைத்து ரூ.11 லட்சத்து பெற்று மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து சரண்யா அளித்த புகாரின் பேரில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். தலைமறைவாக இருந்த காப்பக ஊழியர் வைத்தீஸ்வரனை , இன்ஸ்பெக்டர் நியூட்டன் தலைமையிலான குழுவினர் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த வங்கி மேலாளர் சேகரை தேடி வருகின்றனர்.


மாணவியிடம் சில்மிஷம் பள்ளி ஆசிரியர் கைதுமாமல்லபுரம் : பள்ளி மாணவியிடம், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தனியார் பள்ளி ஆசிரியரான, வி.சி., பிரமுகரை, 'போக்சோ' சட்டத்தில், போலீசார் கைது செய்தனர்.செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் கிறிஸ்தவ பள்ளியில் 13 வயது சிறுமி 8ம் வகுப்பு படிக்கிறார். இப்பள்ளியில் கூவத்துார் அடுத்த, கடலுாரைச் சேர்ந்த மணிமாறன், 49, என்பவர், தமிழ் ஆசிரியராக பணிபுரிகிறார்.இவர் வி.சி., கட்சி, லத்துார் ஒன்றிய செயலராகவும் பதவி வகிக்கிறார்.


latest tamil newsஇவர் மீது, கட்டுமான நிறுவனத்திடம் பணம் கேட்டு மிரட்டியது உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.ஆசிரியர் மணிமாறன், 13 வயது பள்ளி மாணவியிடம் மூன்று மாதங்களாக, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது பற்றி பிறரிடம் தெரிவித்தால், கொன்று விடுவதாக, சிறுமியை மிரட்டியுள்ளார்.சில நாட்களாக சீண்டல் அதிகரித்ததால் பெற்றோரிடம் மாணவி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மாணவியின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் பள்ளிக்கு சென்றனர். அவர்கள் வந்ததை அறிந்து, பள்ளியில் இருந்து மணிமாறன் தப்பியதாக கூறப்படுகிறது.இதனால் அதிருப்தியடைந்த மக்கள் புதுப்பட்டினம், பழைய கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் செய்தனர். கல்பாக்கம் போலீசார், அவர்களை சமரசப்படுத்தினர்.தொடர்ந்து, மாமல்லபுரம், அனைத்து மகளிர் போலீசில், பெண்ணின் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் 'போக்சோ' சட்டத்தில் மணிமாறனை கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X