25 ஆண்டாக தேசியக்கொடியை பள்ளிகளுக்கும், மாணவருக்கும் இலவசமாக வழங்கும் மளிகைக் கடைக்காரர்

Added : ஆக 13, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
தஞ்சாவூர்: பேராவூரணி அருகே உள்ள செருவாவிடுதி கிராமத்தை சேர்ந்த மளிகைக் கடைக்காரர் 25 ஆண்டுகளாக பள்ளிகளுக்கும், மாணவர்களுக்கும் தேசியக்கொடியை இலவசமாக வழங்கி வருகிறார்.தஞ்சாவூர் மாவட்டம், போரவூரணி அருகே செருவாவிடுதி கிராமத்தை சேர்ந்த விஜயகுமார்,63,, இவர் சொந்தமாக சிறிய அளவிலான மளிகைக்கடை ஒன்றை, கடந்த 33 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இவருக்கு செந்தாமரை என்ற மனைவியும்,
25 ஆண்டாக தேசியக்கொடியை பள்ளிகளுக்கும், மாணவருக்கும் இலவசமாக வழங்கும் மளிகைக் கடைக்காரர்

தஞ்சாவூர்: பேராவூரணி அருகே உள்ள செருவாவிடுதி கிராமத்தை சேர்ந்த மளிகைக் கடைக்காரர் 25 ஆண்டுகளாக பள்ளிகளுக்கும், மாணவர்களுக்கும் தேசியக்கொடியை இலவசமாக வழங்கி வருகிறார்.

தஞ்சாவூர் மாவட்டம், போரவூரணி அருகே செருவாவிடுதி கிராமத்தை சேர்ந்த விஜயகுமார்,63,, இவர் சொந்தமாக சிறிய அளவிலான மளிகைக்கடை ஒன்றை, கடந்த 33 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இவருக்கு செந்தாமரை என்ற மனைவியும், லால்பகதூர் என்ற மகனும் உள்ளனர். மகன் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், விஜயகுமார் கடந்த 25 ஆண்டுகளாக பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிப்பெறும், தனியார் பள்ளிகளுக்கும் சுமார் ஒரு லட்சம் ரூபாயில் தனது சொந்த செலவில் தேசியக் கொடியை குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்திற்காக வழங்கி வருகிறார். அத்துடன் சுதந்திர தினம், குடியரசு தினங்களில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களை தனது கடைக்கு வரச் சொல்லி, தேசியக் கொடி ஏற்ற வைத்து அவர்களை கவுரவப்படுத்துவார்.

இது குறித்து விஜயகுமார் கூறியதாவது; கடந்த 1997 ம் ஆண்டு முதல் தேசியக்கொடியை பள்ளிகளுக்கும், மாணவர்களுக்கும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் பள்ளிகளில் கொடி ஏற்றுவதற்கு துணிக் கொடி, மாணவர்களுக்கு சட்டையில் அணிவதற்கு காகித தேசியக்கொடி, மாணவர்கள் கைகளில் கொண்டு செல்லும் வகையிலான பிளாஸ்டிக் கொடி ஆகியவற்றை வழங்கி வருகிறேன். முதலில் 15 பள்ளிகளுக்கு வழங்கிய நிலையில், தற்போது பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கி வருகிறேன். ஆரம்பத்தில் இரண்டு ஆண்டுகள் கொடியைப் பெற்றுக் கொள்ள எவரும் முன்வரவில்லை. இப்போது எனது நோக்கத்தை புரிந்து கொண்டு ஆதரவளித்து வருகின்றனர்.
இதற்காக நான் யாரிடமும் நிதியுதவி பெறுவது இல்லை, கடையில் வியாபாரப் பணத்தில் தினசரி வருவாயில் நுாறு ரூபாயை எடுத்து வைத்து விடுவேன். சுதந்திரத்தின் அருமை இப்போது உள்ளவர்களுக்கு பலருக்கும் தெரியவில்லை. நாம் பெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்பது நமது கடமை. குழந்தைகளிடம் தேசிய உணர்வை வளர்க்கும் வகையில் மனத்திருப்திக்காக நான் இதனை செய்து வருகிறேன் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chennai sivakumar - chennai,இந்தியா
13-ஆக-202215:41:02 IST Report Abuse
chennai sivakumar இவர்களை போன்றவர்களை கௌரவிக்க வேண்டியது நமது மற்றும் அரசின் கடமை. தங்களை விட வயதில் நான் மூத்தவன் ஆனாலும் வணங்குகிறேன் ஐயா. ஜெய்ஹிந்த
Rate this:
Cancel
Yogeshananda - Erode,இந்தியா
13-ஆக-202214:03:08 IST Report Abuse
Yogeshananda 🙏🙏🙏🙏
Rate this:
Cancel
NandaIndia, ஹிந்து என்று சொல்லி தலை நிமிர்வோம் ஐயா, உங்கள் காலில் விழுந்து வணங்குகிறேன். ஜெய் ஹிந்த்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X