21 குண்டுகள் முழங்க வீர மரணமடைந்த ராணுவ வீரர் உடல் அடக்கம்

Updated : ஆக 13, 2022 | Added : ஆக 13, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
மதுரை: காஷ்மீரில் ஆக.,11ம் தேதி அதிகாலை பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த மதுரையை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் என்பவர் வீரமரணம் அடைந்தார். அவருடைய உடல் இன்று (ஆக.,13) மதுரை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.விமான நிலையத்தில் அரசு சார்பில் , நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கலெக்டர் அனிஷ் சேகர், அதிகாரிகள், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் அஞ்சலி
பயங்கரவாதிகள் தாக்குதல் , ராணுவ வீரர் லட்சுமணன், பழனிவேல் தியாகராஜன், Terrorist attack, Army soldier Lakshmanan, Palanivel Thiagarajan,

மதுரை: காஷ்மீரில் ஆக.,11ம் தேதி அதிகாலை பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த மதுரையை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் என்பவர் வீரமரணம் அடைந்தார். அவருடைய உடல் இன்று (ஆக.,13) மதுரை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.விமான நிலையத்தில் அரசு சார்பில் , நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கலெக்டர் அனிஷ் சேகர், அதிகாரிகள், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.


latest tamil news


பின் அவருடைய உடல் சொந்த ஊர் புதுப்பட்டி கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பெற்றோர்கள், கிராம மக்கள் கதறி அழுது அஞ்சலி செலுத்தினர். பிறகு, லட்சுமணன் சொந்த நிலத்தில் அடக்கம் செய்வதற்காக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அவரது உடலில் போர்த்தப்பட்ட தேசிய கொடி பெற்றோரிடம் வழங்கப்பட்டது. அங்கு 21 குண்டுகள் முழங்கி ராணுவம் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராமச்சந்திரன், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் உதயகுமார் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ThiaguK - Madurai,இந்தியா
13-ஆக-202215:18:45 IST Report Abuse
ThiaguK நாட்டுக்காக உயிர் நீத்த புனிதர் வாழ்க .....பூமி உள்ளவரை உம் புகழ் நிலைத்திருக்கும் ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X