அபாயம்!: நெரிசலால் மேலும் முடங்கப்போகிறது வேளச்சேரி : ' பீனிக்ஸ் மால் ' விரிவாக்கத்துக்கு சி.எம்.டி.ஏ., ஒப்புதல்

Updated : ஆக 13, 2022 | Added : ஆக 13, 2022 | கருத்துகள் (12) | |
Advertisement
சென்னை வேளச்சேரியில், ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ள நிலையில், அதற்கு காரணமான பீனிக்ஸ் மால் வளாகத்தில் கூடுதல் கட்டடங்களுக்கு சி.எம்.டி.ஏ., ஒப்புதல் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அப்பகுதி போக்குவரத்து நெரிசலில் ஒட்டுமொத்தமாக முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக, நகரமைப்பு வல்லுனர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.சென்னையில் 'மல்டிபிளக்ஸ்
அபாயம், நெரிசல், வேளச்சேரி,  பீனிக்ஸ் மால், சி.எம்.டி.ஏ.,  ஒப்புதல்

சென்னை வேளச்சேரியில், ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ள நிலையில், அதற்கு காரணமான பீனிக்ஸ் மால் வளாகத்தில் கூடுதல் கட்டடங்களுக்கு சி.எம்.டி.ஏ., ஒப்புதல் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அப்பகுதி போக்குவரத்து நெரிசலில் ஒட்டுமொத்தமாக முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக, நகரமைப்பு வல்லுனர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் 'மல்டிபிளக்ஸ் ஷாப்பிங் மால்' என்ற பெயரில் வணிக வளாகங்கள், திரையரங்குகள் ஒரே வளாகத்திற்குள் அமைக்க அனுமதி வழங்கப்படுகிறது. இது போன்ற வளாகங்கள் அமையும் இடங்களுக்கு, ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் வருவதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இத்தகைய மால்களால், ஒரே இடத்தில் ஒரே நேரத்தில், அதிக அளவு மக்கள் குவியும் நிலை ஏற்படுகிறது. இதனால் வாகன நெரிசல் மட்டுமல்லாது, சுகாதாரம், அடிப்படை வசதிகள் தொடர்பாக பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.

சென்னையில், தலா ஒரு லட்சம் சதுர அடிக்கு குறையாத வகையில், 10க்கும் மேற்பட்ட இடங்களில் இத்தகைய மால்கள் கட்டப்பட்டு உள்ளன.இது போன்ற பெரிய கட்டுமானம் வரும் போது, அதனால் அப்பகுதியில் ஏற்படும் தாக்கம் குறித்த எவ்வித அறிவியல் ரீதியிலான ஆய்வும் இன்றி, அதிகாரிகள் செயல்படுவதாக புகார் கூறப்படுகிறது.கூடுதல் கட்டடங்கள்


சென்னை வேளச்சேரி பிரதான சாலையில், பீனிக்ஸ் மால் அமைக்க, 2009ல் சி.எம்.டி.ஏ., 7.20 லட்சம் சதுர அடி நிலத்தில், 10 லட்சம் சதுர அடி பரப்பளவுக்கு கட்டடங்கள் கட்ட அனுமதி பெறப்பட்டது. இதில் ஒரு பகுதி கட்டுமானங்களுக்கு மட்டுமே, பணி நிறைவு சான்று வழங்கப்பட்டுள்ளது.மீதியுள்ள பகுதிகளின் கட்டுமானங்கள், விதிகளுக்கு உட்பட்டு கட்டப்பட்டதா அல்லது பணி நிறைவு சான்றுக்கான விதிகளை மீறிய கட்டடங்களாக உள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது.

இந்நிலையில், பீனீக்ஸ் மால் வளாகத்தில் கூடுதல் கட்டடங்களுக்கு கட்டுமான அனுமதி கோரி, 2019ல் விண்ணப்பிக்கப்பட்டது. இந்த விண்ணப்பம் மீதான பரிசீலனை முடிக்கப்பட்ட நிலையில், இதற்கு ஒப்புதல் வழங்க சி.எம்.டி.ஏ., முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.


அதிர்ச்சி தான் ஏற்படுகிறதுஇது குறித்து நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது: சென்னை, வேளச்சேரி போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள, குடியிருப்புகள் நிறைந்த பகுதி. இதன் நடுவில், 10 லட்சம் சதுர அடி பரப்பளவில் 'பீனிக்ஸ் மால்' கட்டப்பட்டுள்ளது. இங்கு, 263 கடைகள், 11 திரையரங்குகள், 14 தளங்களில் குடியிருப்பு ஆகியவை கட்டப்பட்டு உள்ளன.இவ்வளவு பெரிய கட்டுமான திட்டத்துக்கு எந்த அடிப்படையில் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., ஒப்புதல் வழங்கியது என்பதை ஆராய்ந்தால் அதிர்ச்சி தான் ஏற்படுகிறது.நகரமைப்பு சட்டப்படி, அடுக்குமாடி கட்டடங்கள் என்ற வகையில், சாலை அகலம், பக்கவாட்டு காலி இடம் ஆகியவற்றின் அடிப்படையில் தான், இந்த வளாகத்துக்கு சி.எம்.டி.ஏ., 2019ல் ஒப்புதல் வழங்கியது.இதை அடிப்படையாக வைத்து, தியேட்டர்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுக்கான ஒப்புதலையும், சம்பந்தப்பட்ட துறைகள் வழங்கி உள்ளன.

ஏதார்த்த சூழலில், அந்த பகுதியில் இவ்வளவு பெரிய திட்டம் வருவதால் ஏற்படும் தாக்கம் என்ன என்பதை யாரும் மதிப்பீடு செய்யவில்லை.போக்குவரத்து நெரிசல், மக்கள் குடியேற்றம் அதிகமாக உள்ள வேளச்சேரி பகுதியில் 10 லட்சம் சதுர அடி அளவுக்கு பெரிய கட்டுமானத்தை அனுமதித்ததே தவறு. இத்துடன் அதில் கூடுதல் கட்டடங்களுக்கு அனுமதி வழங்குவது என்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாக உள்ளது.

கடந்த ஆட்சிக்காலத்தில், 2019ல் விண்ணப்பம் வந்த போதிலும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணைய நிபந்தனைகள் பூர்த்தி செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும், தீயணைப்பு துறை பாதுகாப்பு விதிகள் அடிபடையிலும் சிக்கல் ஏற்பட்டதால் விண்ணப்பம் நிலுவையில் இருந்தது.இந்நிலையில், அந்த கட்டுமானத்தால், அப்பகுதியில் ஏற்படும் பிரச்னை குறித்த அறிவியல் பூர்வ ஆய்வு இன்றி சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் புதிய கட்டட அனுமதி வழங்க முன்வந்தது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

புதிய கட்டட அனுமதி வழங்குவதற்கான பணிகள் எந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.சென்னையில் போக்குவரத்து நெரிசலை அதிகரிக்கும் இத்திட்டத்தின் தாக்கம் குறித்த முழுமையான அறிவியல் பூர்வ ஆய்வு மேற்கொள்ள, தமிழக அரசு முன்வர வேண்டும். சி.எம்.டி.ஏ., தலைவரும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சருமான முத்துசாமி இது விஷயத்தில் உரிய விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


latest tamil newsபொது மக்கள் அதிர்ச்சி!

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:பீனிக்ஸ் மால் அமைந்துள்ள வேளச்சேரி சாலை, 45 மீட்டர் அகலம் என, சி.எம்.டி.ஏ., வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தற்போதைய நிலவரப்படி, அங்கு, 30 மீட்டர் அகலத்துக்கு தான் சாலை உள்ளது.எதிர்கால விரிவாக்கத்தின் போது தேவைப்படும் நிலத்தை, வணிக வளாகம் கட்டிய நிறுவனம், திட்ட அனுமதி பெறும் போது 'கிப்ட் டீட்' வாயிலாக வழங்கி உள்ளது. ஆவண ரீதியாக ஒப்படைக்கப்பட்டாலும், அந்த நிலத்தில் சாலை விரிவாக்கம் செய்யப்படவில்லை. இங்கு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டால், வணிக வளாகத்தின்நுழைவாயில் இருக்கும் இடத்தில் மிகப் பெரிய அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், வணிக வளாகத்தில் இருந்து வெளியில் செல்லும் வாயில் முதல் பிரதான சாலை வரை உள்ள பகுதி சிறிய சந்தாக உள்ளது.இது ஒரு வாகனம் மட்டும் செல்லும் ஒருவழிப்பாதையாக அமைந்துள்ளது. இதனால், தீ விபத்து, நிலநடுக்கம், தீவிரவாதிகள் ஊடுருவல் ஏற்பட்டால், மக்கள் உடனடியாக வெளியேற முடியாத நிலை உள்ளது. இவ்வளவு ஆபத்து உள்ள இடத்தில், கூடுதல் கட்டடங்கள் கட்ட அனுமதிப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.அடிப்படை விதிகளையே மாற்ற வேண்டும்

நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது:சாலை அகலம், கட்டட உயரம், கட்டட தளபரப்பு அடிப்படையிலேயே மால்களுக்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது. போக்குவரத்து காவல் துறை, தீயணைப்பு துறையின் தடையின்மை சான்றுகள் சரியான ஆய்வு இன்றி வழங்கப்பட்டுள்ளன. 'இது போன்ற பெரிய திட்டங்கள், 60 அடி அகல சாலையை ஒட்டி இருந்தால் போதும்' என்பது, அதிகாரிகளின் வாதமாக உள்ளது. ஆனால், நுழைவுப் பகுதிகளில் சில நிமிடங்கள் நின்று தான், வாகனங்கள் உள்ளே செல்ல முடிகிறது. அது போன்று, வாடகை கார்கள், ஆட்டோக்களில் மக்கள் ஏற, இறங்க சாலையை தான் பயன்படுத்த வேண்டியுள்ளது. சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும் போது இருந்த அமைப்புகள், தற்போது இருக்குமா என்பது கேள்விக்குறியே. விதிகளை வகுக்கும் நிலையில் இருந்தே மாற்றங்கள் ஏற்பட்டால் தான், இது போன்ற மால்களால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.


- - நமது நிருபர் --

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
seshadri - chennai,இந்தியா
14-ஆக-202200:40:58 IST Report Abuse
seshadri ஆய்வு என்னய்யா பெரிய ஆய்வு பணம் கைக்கு வந்தால் எல்லா ஆய்வும் ஒரு ஓரமாக ஒதுங்கி கொள்ள வேண்டியதுதான்.
Rate this:
Cancel
சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்
13-ஆக-202220:29:29 IST Report Abuse
சாண்டில்யன் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை விரிவாக்கம் செய்து விடலாம் எந்த வளர்ச்சிக்கும் தடை போடுவது நல்ல அரசியலாகாது முட்டுக் கட்டை அரசியல் முடிந்து போனதாகவே இருக்கட்டும்
Rate this:
துறவோன், சென்னைஅப்போ மாலில் ஒரு பகுதி தான் இடிக்க வேண்டும். அதுக்கு நீங்க என்ன சொல்றீங்க?...
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
13-ஆக-202219:33:57 IST Report Abuse
Natarajan Ramanathan பத்தடி அகலம் உள்ள சாலையில் FORAM VIJAYA MAAL இருக்கிறதே? அதை எப்போது இடிக்க போகிறார்கள்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X