தேனி ஆவினில் முறைகேடுகள்'ரெய்டில்' ஆவணங்கள் சிக்கின

Added : ஆக 13, 2022 | |
Advertisement
தேனி: தேனி ஆவின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். தேனி அருகே அரண்மனைப்புதுார், பசுமை நகரில் பால்வள துணைப்பதிவாளர் அலுவலகம் இயங்குகிறது. இங்கு, பால் உற்பத்தியாளர் சங்கங்கள் பதிவு செய்வதிலும், புதுப்பித்தல் கட்டணம் வசூலிப்பதிலும், பால் கொள்முதலுக்கு காசோலை வழங்குவதிலும் முறைகேடு நடந்து வருவதாக சென்னை ஆவின் லஞ்ச

தேனி: தேனி ஆவின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

தேனி அருகே அரண்மனைப்புதுார், பசுமை நகரில் பால்வள துணைப்பதிவாளர் அலுவலகம் இயங்குகிறது. இங்கு, பால் உற்பத்தியாளர் சங்கங்கள் பதிவு செய்வதிலும், புதுப்பித்தல் கட்டணம் வசூலிப்பதிலும், பால் கொள்முதலுக்கு காசோலை வழங்குவதிலும் முறைகேடு நடந்து வருவதாக சென்னை ஆவின் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது.தொடர்ந்து, கண்காணிப்பு குழு ஆய்வாளர் சத்தியசீலன், துணை மேலாளர் ரவி, செயல் அலுவலர் கோபி தலைமையில் நேற்று முன்தினம் காலை முதல் இரவு, 10:00 மணி வரை பழனிசெட்டிபட்டியில் உள்ள ஆவின் அலுவலகத்தில் சோதனை செய்தனர்.



இதில், முக்கிய ஆவணங்கள், ரசீதுகள், அலுவலர்கள் கையெழுத்திட்ட கோப்புக்களை கைப்பற்றினர். இது குறித்து, அதிகாரி ஒருவர் கூறுகையில், 'முறைகேடுகள் குறித்து புகார் வந்ததால், லஞ்ச ஒழிப்பு குழுவினர் அலுவலர்களிடம் விசாரணை நடத்தினர். சில ஆவணங்களையும், அலுவலக கோப்புகளையும் எடுத்துச் சென்றனர்' என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X