அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றுவோம்: ரஜினி

Updated : ஆக 14, 2022 | Added : ஆக 13, 2022 | கருத்துகள் (53) | |
Advertisement
சென்னை: ஜாதி, மதம், அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடியை ஏற்றுவோம் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவிற்கு, நமது தாய் நாட்டிற்கு இது 75வது சுதந்திரம். ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையிலும், மரியாதை செலுத்தும் வகையிலும், சொல்லொணாப் போராட்டங்களையும், துயரங்களையும், வலிகளையும் அவமானங்களையும்
rajini, rajinikanth, national flag, flag, india, ரஜினி, ரஜினிகாந்த், தேசிய கொடி,

சென்னை: ஜாதி, மதம், அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடியை ஏற்றுவோம் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவிற்கு, நமது தாய் நாட்டிற்கு இது 75வது சுதந்திரம். ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையிலும், மரியாதை செலுத்தும் வகையிலும், சொல்லொணாப் போராட்டங்களையும், துயரங்களையும், வலிகளையும் அவமானங்களையும் அனுபவித்த லட்சக்கணக்கான மக்களுக்கும், இந்த சுதந்திரத்திற்காக தன்னலமின்றி உயிர் தியாகம் செய்த அத்தனை லட்சக்கணக்கான மக்களுக்கும் மரியாதையின் அடையாளமாகவும், நமது ஒற்றுமையின் வெளிப்பாடாகவும், அந்த சுதந்திரப் போராட்ட தியாகிகள், வீரமரணம் அடைந்தவர்கள், தலைவர்களை அவர்களைப் போற்றி பெருமை படுத்துவோம். ஜாதி, மதம் மற்றும் அரசியலை தாண்டி, நமது வீடுகள், அலுவலகங்கள் மற்றும் பணிபுரியும் இடங்களில் தேசியக்கொடியை ஏற்றி, அதன் பெருமையை நமது அடுத்த தலைமுறை குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடம் கொண்டு செல்வோம். இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாடுவோம். நாம் வணக்கம் செலுத்தும் வகையில் அனைத்து இடங்களிலும் தேசியக்கொடி பறக்கட்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ரஜினி கூறியுள்ளார்.



வீடியோ


latest tamil news



வீடியோ ஒன்றையும் ரஜினி வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது: நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகிறது. சுதந்திரத்திற்காக எத்தனையோ வருடங்கள், பல லட்சகணக்கானோர் சித்ரவதைகள், கொடுமைகள் அனுபவித்துள்ளனர். எத்தனையோ பேர் உயிர் தியாகம் செய்துள்ளனர். அந்த சுதந்திர தியாகிகள், வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், நமது நாட்டை வணங்கும் விதமாகவும், நம்முடைய ஒற்றுமையை காட்டும் விதமாகவும், வரும் ஆக.,15ம் தேதி கட்சி, ஜாதி, மதம், அரசியல் வேறுபாடு இல்லாமல், நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வுடன் 2 அல்லது 3 அடி கம்பில் தேசியக்கொடியை கட்டி, நமது வருங்கால சந்ததிகளான குழந்தைகள், இளைஞர்கள் கைகளில் வீடு முன்னாள் பறக்க விட்டு பெருமைப்பட வேண்டும். நாடு இல்லை என்றால் நாம் இல்லை. நாம் இந்தியர்கள் என பெருமைப்படுவோம் எனக்கூறியுள்ளார்.


வீட்டில் தேசியக்கொடி


latest tamil news


நடிகர் ரஜினி நேற்றே(ஆக.,12) தனது வீட்டில் தேசியக்கொடியை ஏற்றியது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu Iyer - chennai,இந்தியா
14-ஆக-202207:59:43 IST Report Abuse
Visu Iyer இவரே தமிழர் இல்லை.. என்று சொல்லிக்கிட்டு ஒரு கூட்டம் வரும் பாருங்க...
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
14-ஆக-202207:59:24 IST Report Abuse
Visu Iyer மக்களே எல்லோரும் பசி வந்தவுடன் சாப்பிடுங்கள்.. தூக்கம் வரும் போது தூங்குங்கள் //// இப்படி சொல்வதற்கு ஒருத்தர் வர வேண்டும் என்று தமிழக மக்கள் நினைக்கவில்லை..
Rate this:
Cancel
Bala - chennai,இந்தியா
14-ஆக-202201:33:38 IST Report Abuse
Bala பாரத அன்னையின் புகழ் ஓங்குக. ஜெய் ஹிந்த், ஜெய் ஹிந்த், ஜெய் ஹிந்த். வந்த மாதரம், வந்த மாதரம், வந்த மாதரம்
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
14-ஆக-202208:03:38 IST Report Abuse
Visu Iyerவந்த மாதரம் ///இது எழுத்து பிழையா.. அல்லது உங்களுக்கு தெரிந்தது இவ்வளவு தானா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X