கள்ளக்குறிச்சி அஞ்சல் நிலையத்தில் தேசிய கொடி 'கிடுகிடு'வென விற்று தீர்ந்ததால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.
நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற மத்திய, மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. இதையொட்டி, அனைத்து தலைமை அஞ்சலகங்கள் மற்றும் துணை அஞ்சல் அலுவலகங்களில் மலிவு விலையில் தேசிய கொடி விற்பனை துவங்கியது.25 செ.மீ., நீளம், 30 செ.மீ., அகலம் கொண்ட ஒரு தேசிய கொடி 25 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
விற்பனை துவங்கியதும், அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் தேசிய கொடியினை ஆர்வமுடன் வாங்கினர்.கள்ளக்குறிச்சி அஞ்சல் அலுவலகத்திற்கு விற்பனைக்காக வந்த 2,000 தேசிய கொடிகளும் கிடுகிடுவென விற்று தீர்ந்தது. இதனால், தேசிய கொடி வாங்குவதற்காக நேற்று சென்ற பொதுமக்கள் ஏமாற்றமடைந்து, கடைகளில் வாங்கினர்.